Home
News

Airtel ஒரே போடு.. மொத்த குடும்பத்துக்கும் ஒரே ரீசார்ஜ்.. 5 SIM கார்டு, 200GB டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ், ஓடிடி!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனமானது - தனது வாடிக்கையாளர்களுக்கு தன்னால் முடிந்த பெஸ்ட் ஃபேமிலி மொபைல் பிளான் (Best Family Mobile Plan) ஒன்றை வழங்கி வருகிறது.

இந்த திட்டம் மொத்தம் 5 சிம் கார்டுகள், 200ஜிபி டேட்டா, டெய்லி எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நெட்பிளிக்ஸ், ப்ரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் என.. எந்தவொரு நன்மையையும் விட்டுவைக்காமல்.. ஒரு வாடிக்கையாளருக்கு என்னென்ன தேவைகள் இருக்குமோ அதை அனைத்தையுமே ஒரே ரீசார்ஜ்ஜின் கீழ் வழங்குகிறது.

Airtel ஒரே போடு.. மொத்த குடும்பத்துக்கும் ஒரே ரீசார்ஜ்.. 5 SIM கார்டு!

நாம் இங்கே பேசுவது - பார்தி ஏர்டெல்லின் ரூ.1749 மொபைல் போஸ்ட்பெய்ட் திட்டத்தை (Bharti Airtel Rs 1749 Mobile Postpaid Plan) பற்றித்தான். இது ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மிகவும் விலையுயர்ந்த போஸ்ட்பெய்ட் மொபைல் பிளான்களில் ஒன்றாகும். ஆனால் ஒட்டுமொத்த குடும்பத்துக்குமான ஒரு செலவாக பார்த்தால், ஒவ்வொருவருக்காகவும் செய்யப்படும் தனிப்பட்ட ரீசார்ஜ்களின் ஒட்டுமொத்த விலையுடன் ஒப்பிடடால், இது மலிவானதாக தெரியலாம்.

பார்தி ஏர்டெல்லின் ரூ.1749 மொபைல் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முன்னரே குறிப்பிட்டபடி இதுவொரு ஃபேமிலி பிளான் (Family Plan) ஆகும்; தனிப்பட்ட திட்டம் (Individual plan) அல்ல. அதாவது இந்த ஒரு ரீசார்ஜை நிறைய பேர் பயன்படுத்த முடியும். ரூ.1749 திட்டத்தின் கீழ் உங்களுக்கு 5 சிம் கார்டுகள் (5 SIM Cards) கிடைக்கும் - ஒரு முதன்மை சிம் (1 Primary SIM) மற்றும் நான்கு இரண்டாம் நிலை சிம் (4 Secondary SIMs) கனெக்ஷன்கள் கிடைக்கும்.

அனைத்து சிம் கார்டுகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் (Daily Free 100 SMS ) கிடைக்கும். டேட்டா நன்மையை பொறுத்தவரை, முதன்மை சிம்மிற்கு (ஒரு பில்லிங் சுழற்சிக்கு) 200ஜிபி டேட்டா (200GB Data) கிடைக்கும் மற்றும் இரண்டாம் நிலை கனெக்ஷன்களுக்கு 30ஜிபி டேட்டா (30GB Data) கிடக்கும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் 200ஜிபி வரையிலான டேட்டா ரோல்ஓவர் ஆதரவும் (Data Rollover Support) கிடைக்கும். அறியாதோர்களுக்கு டேட்டா ரோல்ஓவர் ஆனது, இந்த மாதத்தில் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு நகர்த்த உதவும். பார்தி ஏர்டெல்லின் ரூ.1749 மொபைல் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் ஓடிடி நன்மைகளும் (OTT Benefits) அணுக கிடைக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் பல பிரபலமான ஓடிடி தளங்களின் தொகுப்பை கொண்டுள்ள ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium), நெட்பிளிக்ஸ் ஸ்டாண்டர்ட் (Netflix Standard), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney Plus Hotstar Mobile), 6 மாதங்களுக்கான அமேசான் ப்ரைம் (Amazon Prime Video) ஆகிய ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்.

நீங்கள் நெட்பிளிக்ஸ் ஸ்டாண்டர்ட் சந்தாவை மாதத்திற்கு ரூ.150 அதிகமாக செலுத்துவதன் மூலம் நெட்பிளிக்ஸ் பிரீமியம் (Netflix Premium) சந்தாவிற்கு அப்கிரேட் ஆகலாம். இதுதவிர்த்து ரூ.1749-ன் கீழ் விஐபி சர்வீஸ் (VIP Service), அப்பலோ 24/7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), ப்ளூ ரிப்பன் பேக் (Blue Ribbon Bag), விங்க் (Wynk) வழியாக இலவச ஹலோ ட்யூன்ஸ் (Hello Tunes) ஆகியவைகளும் கிடைக்கும்.

மேலும் 10 மற்றும் 30 நாட்கள் செல்லுபடியாகும் எந்தவொரு சர்வதேச ரோமிங் பேக்குகளை (International roaming packs) வாங்கினாலும் ரூ.3000 தள்ளுபடியும் கிடைக்கும். இந்த சலுகை ரூ.1749 திட்டம் செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 1749 Mobile Postpaid Family Plan 5 SIM Cards 200GB Data Call SMS Netflix Prime Hotstar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X