Home
News

Airtel சிம் இருக்கா? இனிமே ரூ.279-க்கு 1 மாசம்.. ரூ.1729-க்கு 3 மாசம்.. புதுசா இறக்கியாச்சு.. மூன்று ரீசார்ஜ்!

ஏர்டெல் (Airtel) சிம் கார்டு வைத்திருக்கும் ஒட்டுமொத்த ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கும் புதிய திட்டங்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றன. ரூ.279 விலை கொண்ட திட்டத்தில் 1 மாத வேலிடிட்டி மற்றும் ரூ.1729 விலை கொண்ட திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் டேட்டா, ஓடிடி மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா என்று சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. இந்த ஏர்டெல் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களின் (Airtel New Prepaid Plan) விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

நெட்பிளிக்ஸ் பேசிக், ஜியோஹாட்ஸ்டார் சூப்பர், ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் போன்ற ஓடிடி சலுகைகளுடன் இந்த புதிய திட்டங்கள் களமிறங்கி இருக்கின்றன. விலைக்கு ஏற்ப டேட்டா பேக் அல்லது வாய்ஸ் கால்கள் அடங்கிய திட்டங்களாக கிடைக்கின்றன. ஆகவே, ஒரே திட்டத்தில் அனைத்து பிரீமியம் ஓடிடி ஆப்களையும் பெற்று கொள்ள முடிகிறது.

Airtel சிம் இருக்கா? இனிமே ரூ.279-க்கு 1 மாசம்.. ரூ.1729-க்கு 3 மாசம்!

ஏர்டெல் ரூ 279 திட்ட விவரங்கள் (Airtel Rs 279 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா மற்றும் பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தா மட்டுமே கிடைக்கும். மற்ற சலுகைகள் எதையும் எதிர்பாக்க முடியாது. ஆகவே, இந்த டேட்டா திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 1 மாத வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic) சந்தா வருகிறது.

மேலும், ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் (JioHotstar Super) சந்தா மற்றும் ஜீ5 பிரீமியம் (ZEE5 Premium) சந்தா கொடுக்கப்படுகிறது. இதுபோக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தாவை பெற்று கொள்ள முடிகிறது. இந்த எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாவின் கீழ் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), சாவ்பால் (Chaupal) மற்றும் ஆஹா (Aha) ஓடிடி ஆப் கிடைக்கிறது.

மேலும், ஹோய்சோய் (Hoichoi) மற்றும் சன்நெக்ஸ்ட் (SunNXT) போன்ற ஓடிடி ஆப்களும் கிடைக்கிறது. இந்த ஓடிடி ஆப்கள் போக 1 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கிறது. ஆனால், இந்த டேட்டாவுக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடைக்காது. ஆகவே, இதற்கு ஆக்டிவ் பிரீபெய்ட் திட்டம் மற்றும் ஓடிடிகளை பார்ப்பதற்காக குறைந்தது 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டம் தேவைப்படும்.

ஏர்டெல் ரூ 598 திட்ட விவரங்கள் (Airtel Rs 598 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிகப்படியான ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், கூடவே டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு முந்தைய திட்டத்தில் கிடைத்த நெட்பிளிக்ஸ் பேசிக் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா வருகிறது.

அதேபோல ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் கிடைக்கிறது. இதற்கு அடுத்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பெற முடியும். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ 1729 திட்ட விவரங்கள் (Airtel Rs 1729 Plan Details): இந்த ஏர்டெல் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் முந்தைய திட்டத்தில் பார்த்த ஓடிடி ஆப்கள் மற்றும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, 84 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே அதிகமாக இருக்கிறது.

FAQs
மேற்கண்ட திட்டங்களில் ஓடிடி சந்தா எவ்வளவு நாட்களுக்கு வரும்?

இந்த ஏர்டெல் ஓடிடி திட்டங்களுக்கு எவ்வளவு நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறதோ, அந்த நாட்கள் வரையில் மட்டுமே ஓடிடி ஆப்களுக்கு சந்தா கிடைக்கிறது. ஆனால், முன்னதாக கிடைத்த ரூ.100 ஓடிடி திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா 90 நாட்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட 5 ஜிபி டேட்டாவுக்கு 30 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைத்தது.

போஸ்ட் டேட்டா என்றால் என்ன?

போஸ்ட் டேட்டா என்பது ஒரு ப்ரீபெய்ட் திட்டத்துக்கு ஒரு நாளுக்கு ஒதுக்கப்பட்ட டேட்டா முடிந்த பிறகு கிடைக்கும் டேட்டா சலுகையாகும். இது இலவசமாக கிடைக்கிறது. ஆகவே, குறைவான வேகத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஏர்டெல்லில் 64 கேபிபிஎஸ் வேகத்தில் கொடுக்கப்படுகிறது. அதேபோல ஜியோ மற்றும் வோடபோன் ஐடியாவிலும் கிடைக்கிறது.

GizBot Technology

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1729 Plan With Netflix Zee5 JioHotstar Airtel Xstream Play Premium OTT Check New OTT Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X