Airtel-க்கு கும்பிடு.. பட்ஜெட் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி.. OTT.. தினமும் 2ஜிபி டேட்டா.. விட்றாதீங்க..
ஏர்டெல் நிறுவனம் ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் அதிகம் அறிமுகம் செய்கிறது. தற்போது ஓடிடி சந்தா இருக்கும் திட்டங்களை தான் மக்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர். எனவே தான் ஏர்டெல் நிறுவனம் ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது.
சரி இப்போது விஷயத்து வருவோம். அதாவது ஏர்டெல் ரூ.1729 மற்றும் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிக ஓடிடி சந்தா மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை வழங்குகிறது. இங்கே அந்த திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1729 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் (zee5 premium) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (airtel xstream play) பிரீமியம் உள்ளிட்ட ஓடிடி சந்தா வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now), சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற
20க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data),
ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) போன்ற சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 598 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் உள்ளிட்ட அசத்தலான ஓடிடி சந்தா நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls)
சலுகை ஏர்டெல் ரூ.598 திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications