கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்த நம்ம ஏர்டெல்.!
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.448 ப்ரீபெயிட் திட்டத்தில் முன்பு 1ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு கிடைத்தது.
தற்போது தொலை தொடர்பு நிறுவனங்களுக்குள் கடுமையான சவால் ஏற்பட்டுள்ளதால், அனைத்து ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களை ஈர்ப்பதற்காக பல புதிய திட்டங்களைக் கொண்டு வருகின்றனர். மேலும் ஏர்டெல் நிறுவனம்
அறிமுகம் செய்த ரூ.23 பிரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது, இந்த திட்டம் செல்லுபடியை நீட்டித்து, எண் துண்டிக்கப்படுவதை தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.448 ப்ரீபெயிட் திட்டத்தில் முன்பு 1ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு கிடைத்தது, தற்சமயம் இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது, அதாவது ரூ.448 திட்டத்தில் இப்போது 1.5ஜிபி டேட்டா வீதம் 82 நாட்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ், கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெயிட் திட்டம்:
ஏர்டெல் ரூ.399 ப்ரீபெயிட் ப்ரீபெயிட் திட்டத்தில் இதற்குமுன்பு 1ஜிபி டேட்டா வீதம் 70நாட்களுக்கு வழங்கப்பட்டது, இனிமேல் 1ஜிபி டேட்டா வீதம் 84நாட்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் நிறுவனம் இதற்கு முன்பு அறிமுகம் செய்த சிறப்பு திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் 169 பரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் 169 பரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற சலுகைகளும்வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.289/- ப்ரீபெயிட் திட்டம்:
ஏர்டெல் ரூ.289/- ப்ரீபெயிட் திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 48நாட்களுக்கு வழங்கப்படுகிறது, குறிப்பாக இலவச கால் அழைப்புகள், தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் ரூ.289 திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் ரூ.419 திட்டம்:
ஏர்டெல் ரூ.419 திட்டத்தில்வாடிக்கையாளர்களுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 75 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 42ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதாவது நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வீதம் 14 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








