இன்று அறிமுகம் : ஏர்டெல் ரூ.168/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி.?
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.449 திட்டம் பொறுத்தவரை தினசரி 2ஜிபி விதம் 70 நாட்களுக்க பயன்படுத்த முடியும்.
ஏர்டெல் நிறுவனம் இப்போது புதிய ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் குறிப்பாக பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் விரைவில் இந்நிறுவனம் பல்வேறு புதிய சலுகைகளை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் ரூ.168/- ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர்டெல் நிறுவனம் வழங்கும் சிறப்பு திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.429/- ப்ரீபெயிட் திட்டம்:
ஏர்டெல் வழங்கும் ரூ.429/- ப்ரீபெயிட் திட்டம் பொறுத்தவரை நாள்ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வீதம் 75நாட்களுக்கு பயன்படுத்த முடியும். பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

ஏர்டெல் ரூ.289/- ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள ரூ.289 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வீதம் 42நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.299/- ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் அறிவித்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 42நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகளைப் பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் ரூ.449/- ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.449 திட்டம் பொறுத்தவரை தினசரி 2ஜிபி விதம் 70 நாட்களுக்க பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் 140ஜிபி டேட்டா கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications