அடிச்சான் பாரு Airtel.. தினமும் 1GB முதல் 50GB டேட்டா வரை.. ரூ.161 முதல் புதிய மாஸ் திட்டங்கள்.. என்ன நன்மை?
பாரதி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் இப்போது இந்தியாவில் மூன்று புதிய டேட்டா ரீசார்ஜ் திட்டங்களை (New Airtel Data Recharge Plans) அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் முதல் பட்ஜெட் விலை வரை தினசரி டேட்டா மற்றும் லம்ப் சம் டேட்டா (Lump Sum Data) என்று இரண்டு வகையில் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட வேலிடிட்டி செல்லுபடியுடன் நிறுவனம் இப்போது புதிய டேட்டா ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுடன் கிடைக்கும் தினசரி டேட்டா நன்மைக்கு மேல் கூடுதல் டேட்டாவை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பெஸ்ட் தேர்வாக அமைகிறது.
அடிச்சான் பாரு Airtel.. தினமும் 1GB முதல் 50GB டேட்டா வரை.. ரூ.161 முதல் புதிய மாஸ் திட்டங்கள்:
ஏர்டெல் நிறுவனம் இப்போது இந்தியாவில் ரூ. 161, ரூ. 181 மற்றும் ரூ. 361 என மூன்று ரீசார்ஜ் விருப்பங்களை வழங்குகிறது. இவை அனைத்தும் 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகின்றன. ஏற்கனவே இருக்கும் டேட்டா திட்டங்களின் பட்டியலை இது விரிவுபடுத்துகிறது. ஏனெனில் ஏற்கனவே குறைந்த வகையான திட்டங்கள் பல்வேறு செல்லுபடி நாட்களுடன் செயல்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ. 161 ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 161 Data Plan):
சரி, இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்று புதிய திட்டங்கள் எத்தனை ஜிபி டேட்டாவை என்னென்ன நன்மைகளுடன் வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க. ஏர்டெல்லின் ரூ. 161 ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 161 Data Plan) 30 நாட்களுக்கு 12ஜிபி டேட்டாவை பயனாளர்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம் தினசரி டேட்டா பயன்பாட்டு வரம்புகளைப் பற்றிய கவலை வாடிக்கையாளர்களுக்கு இருக்காது என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் ரூ. 181 திட்டம் (Airtel Rs 181 Plan):
இந்த திட்டம் 1 ஜிபி டேட்டாவுக்கு சுமார் ரூ. 13 என்ற விலையில் வழங்குகிறது. அதைத் தொடர்ந்து, ஏர்டெல் ரூ. 181 திட்டம் (Airtel Rs 181 Plan) 30 நாட்களுக்கு 15ஜிபி டேட்டாவை தினசரி பயன்பாட்டு வரம்பு இல்லாமல் வழங்குகிறது. இதன் விலை 1GB-க்கு சுமார் ரூ. 12 ஆகும். இறுதியில், ஏர்டெல் ரூ. 361 திட்டம் (Airtel Rs 361 Plan), மொத்தமாக 50GB டேட்டாவை வழங்குகிறது.
ஏர்டெல் ரூ. 361 திட்டம் (Airtel Rs 361 Plan):
இதுவும் தினசரி வரம்பில்லாத லம்ப் சம் டேட்டாவை வழங்குகிறது. இதன் விலை 1 ஜிபி டேட்டாவுக்கு சுமார் ரூ. 7 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்கள் பயனாளர்களுக்கு அதிக டேட்டா நன்மையை 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வரம்பில்லாத நன்மையாக வழங்கப்படுள்ளன. இதன் மூலம் கவலையின்றி மக்கள் அவர்களின் தேவைக்கேற்ப்ப டேட்டா நன்மையை பயன்படுத்த முடியும்.
ஏர்டெல் ரூ. 211 பிளான் (Airtel Rs 211 Plan):
ஒருவேளை உங்களுக்கு இப்படி மொத்தமாக இவ்வளவு டேட்டா வேண்டாம் என்றால், ஏர்டெல் நிறுவனம் தற்போது கூடுதலாக தினசரி 1GB டேட்டா நன்மையை வழங்கும் புதிய திட்டத்தை நீங்கள் பயன்படுத்தி பயன்பெறலாம். இந்த திட்டம் உங்களுக்கு 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் ஏர்டெல் ரூ. 211 பிளான் (Airtel Rs 211 Plan) என்ற பெயருடன் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் மூலம் மொத்தம் 30ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலை ஒரு நாளைக்கு ரூ. 7 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் அடிப்படை ரீசார்ஜ் திட்டத்தில் உங்களுக்கு 1GB டேட்டா, 1.5GB டேட்டா, 2GB டேட்டா அல்லது 2.5GB டேட்டா என எவ்வளவு டேட்டா கிடைத்தாலும், அந்த தினசரி வரம்பு முடிந்த பிறகு, இந்த திட்டத்துடன் கிடைக்கும் 1GB டேட்டாவை நீங்கள் தடையின்றி பயன்படுத்திக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








