Home
News

கேபிள் டிவிக்கு கும்பிடு.. ரூ.1099 போதும்.. DTH கனெக்சன்.. OTT சப்ஸ்கிரிப்ஷன்.. 200எம்பிபிஎஸ் டேட்டா!

ஜியோ நிறுவனமே மிரளும்படி கேபிள் டிபி, ஓடிடி, டேட்டா, லேண்ட்லைன் என்று தனித்தனியாக இருக்கும் சலுகைகளை ஒரே திட்டத்தில் கொண்டுவந்து, அதற்கு கம்மியான விலையை நிர்ணயம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இந்த சலுகைகளை கொண்ட 2 திட்டங்களை பற்றி இப்போது பார்க்கப்போகிறோம்.

ஏர்டெல் ரூ 1599 திட்ட விவரங்கள் (Airtel Rs 1599 Plan Details): இந்த ஏர்டெல் பிளாக் (Airtel Black) திட்டத்தில், ஃபைபர் (Fiber) மற்றும் லேண்ட்லைன் (Landline) கனெக்சன் வழங்கப்படுகிறது. அதோடு டிடிஎச் (DTH) மற்றும் ஓடிடி (OTT) சலுகைகளையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது.

ரூ.1099 போதும்.. DTH கனெக்சன்.. OTT சந்தா.. 200எம்பிபிஎஸ் டேட்டா!

இந்த டேட்டாவை டிவி, மொபைல், லேப்டாப், டேட்லெட் போன்ற மல்டிபிள் டிவைஸ்களில் ஒரே நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். மொத்தமாக 5க்கும் மேற்பட்ட டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ளலாம்.
இந்த சலுகைபோக லேண்ட்லைன் கனெக்சன் கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை செய்து கொள்ளலாம்.

இந்த ஏர்டெல் பிளாக் திட்டத்தில் டிடிஎச் சலுகை வருவதால், செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படுகிறது. அதில் ரூ.350 மதிப்பிலான லைவ் டிவி சேனல்களின் (Live TV Channel) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் ஓடிடி சலுகைகளை பார்க்கையில் நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா கிடைக்கிறது.

இதுமட்டுமல்லாமல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பீரிமியம் (Airtel Xstream Premium) சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவின் கீழ் சோனிலிவ் (SonyLiv), லையன்ஸ்கேட்பிளே (LionsgatePlay), ஈராஸ்நவ் (ErosNow), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), ஷீமரூமி (Shemaroome), நம்மபிளிக்ஸ் (Nammaflix) டிவோ (Divo), அல்ட்ரா (Ultra) மற்றும் ஹங்கமா பிளே (HungamaPlay) உள்ளிட்ட 12 ஆப்களை பயன்படுத்தலாம்.

இதே போன்ற சலுகைகளுடன் மலிவான விலையில் ஏர்டெல் பிளாக் திட்டம் வேண்டுமானால், ரூ 1099 விலையில் மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்திலும் ஃபைபர், லேண்ட்லைன், டிடிஎச் மற்றும் ஓடிடி சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தின் முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்வோம்.

ஏர்டெல் ரூ 1099 திட்ட விவரங்கள் (Airtel Rs 1099 Plan Details): இந்த திட்டத்தில் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 3க்கும் மேற்பட்ட டிவைஸ்களை கனெக்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே லேண்ட்லைன் கனெக்சன் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால் சலுகையை பெறலாம். ரூ.350 மதிப்புள்ள லைவ் டிவி சேனல்கள் சந்தா கொடுக்கப்படுகிறது. இதுபோக அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பீரிமியம் ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.

இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பீரிமியம் சந்தாவில் முந்தைய திட்டத்தை போலவே, சோனிலிவ், ஈராஸ்நவ், டிவோ உள்ளிட்ட 12 ஆப்களை பயன்படுத்தலாம். இந்த 2 திட்டங்களுக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. லேண்ட்லைன் மற்றும் டிடிஎச் கனெக்சனை முதலில் பெற இன்ஸ்டாலேஷன் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல ஜிஎஸ்டியும் இவற்றறுக்கு பொருந்தும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1599 Plan With 300 Mbps Speed Unlimited Data, TV Chennels Voice Calls, OTT Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X