2024 வந்தாச்சு.. இதான் ரீசார்ஜ் லிமிட்.. இதுக்கு கம்மி கிடையாது.. ஏர்டெல் கஸ்டமர்களுக்கு எவ்வளவு மினிமம்?
2024ஆம் ஆண்டில் ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு கிடைக்க இருக்கும் குறைந்தபட்ச விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள். வாய்ஸ் கால்கள், டேட்டா வேண்டுமானால், குறைந்தது இந்த தொகையை கட்டாயம் செலுத்தினால் மட்டுமே சேவைகள் கிடைக்கும். இதுகுறித்த விவரம் இதோ.
ஜியோவுக்கு அடுத்தப்படியாக அதிகப்படியான கஸ்டமர்களை கொண்டிருக்கும் ஏர்டெல் நிறுவனம், அவ்வப்போது புதுப்புது திட்டங்களையும், சலுகைகளையும் கொடுத்து வருவதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், ஜியோவுக்கு நிகரான சலுகைகளை கொடுக்க தொடர்ந்து போராடி வருகிறது. அந்த வரிசையில், மினிமம் ரீசார்ஜ் கட்டணத்தை ரூ 99 ஆக வைத்திருந்தது.

இந்த ஏர்டெல் ரூ 99 ப்ரீபெய்ட் திட்டமானது, (Airtel Rs 99 Prepaid Plan) சிம் ஆக்டிவ் (SIM Active) சலுகை கொடுக்கும் திட்டமாகும். குறைந்தபட்ச இந்த திட்டம் இருந்தால், மட்டுமே வாடிக்கையாளர்களால் ஏர்டெல் சேவைகளை பெற முடியும். இந்த திட்டத்தில் ரூ 99 டாக்டைம் மற்றும் 200 எம்பி டேட்டா சலுகை கொடுக்கப்பட்டது. அதோடு வாய்ஸ் கால்களுக்கு செகண்ட்டுக்கு 2.5 பைசா வசூலிக்கப்பட்டது.
ஆனால், இந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுவிட்டது. சொல்லப்போனால், கடந்த ஆண்டே ரூ 99 ப்ரீபெய்ட் திட்டம் நீக்கப்பட்டுவிட்டது. ஆகவே, 2024ஆம் ஆண்டில் ஏர்டெல் கஸ்டமர்கள் தங்களது சிம் கார்டை ஆக்டிவாக வைத்திக்க வேண்டும் என்றால், ஏர்டெல் ரூ 155 ப்ரீபெய்ட் திட்டத்தை (Airtel Rs 155 Prepaid Plan) ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் டேட்டா (Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) போன்ற பேஸிக் சலுகைகள் மட்டுமல்லாமல், குறிப்பிட்ட சில கூடுதல் சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன. ஆகவே, இந்த பேஸிக் ப்ரீபெய்ட் திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கொடுக்கப்படுகின்றன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
ஏர்டெல் ரூ 155 திட்ட விவரங்கள் (Airtel Rs 155 Plan Details): இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 24 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதோடு 300 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.
இதை தினசரி 100 வீதம் பயன்படுத்தலாம். அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படவில்லை.
இருப்பினும், ப்ரீ ஹலேடியூன்ஸ் (Free Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஃபேர் யூசேஸ் பாலிசி (Fair Usage Policy) டேட்டா கிடையாது. ஆகவே, தினசரி டேட்டா 1 ஜிபிக்கு பிறகு 1 எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும்.
அதேபோல 300 எஸ்எம்எஸ்களுக்கு பிறகு லோக்கலுக்கு 1 ரூபாயும், எஸ்டிடிக்கு 1.5 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களது சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டுமானால், 2024ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








