Home
News

கும்பிடு போடும் கஸ்டமர்ஸ்.. மாதம் ரூ.499 போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. 3GB டேட்டா.. OTT சந்தா!

ஜியோ நிறுவனத்துக்கு நிகராக மாதத்துக்கு ரூ 499 செலவில் 84 நாட்கள் வேலிடிட்டியோடு 3 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல் நெட்பிளிக்ஸ் சந்தாவையும் ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது. இந்த புதிய திட்டத்தின் முழு விவரங்கள் இதோ.

ஏர்டெல் ரூ 1499 திட்ட விவரங்கள் (Airtel Rs 1499 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், ஓடிடி மற்றும் மியூசிக் ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

மாதம் ரூ.499 போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. 3GB டேட்டா.. OTT சந்தா!

ஆகவே, மொத்தமாக 252 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். அதோடு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால் சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ள முடியும்.

மேலும், ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Airtel Unlimited 5G Data) சலுகையையும் பெற்று கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle), ப்ரீ ஹெலோட்யூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த சலுகைகள் போக நெட்பிளிக்ஸ் (Netflix) பேஸிச் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. தினசரி 3 ஜிபி டேட்டா கிடைப்பதால், ஓடிடி பிரியர்களுக்கு இந்த திட்டம் பக்காவான தேர்வாக இருக்கும். அதோடு கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைப்பதால், நல்ல திட்டமாகவே தோன்றுகிறது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியை கிளைம் செய்வது எப்படி? ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கிளைம் செய்வது போலவே இந்த நெட்பிளிக்ஸ் ஓடிடியையும் கிளைம் செய்துகொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தவுடன் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை (Airtel Thanks App) ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.

மாதம் ரூ.499 போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. 3GB டேட்டா.. OTT சந்தா!

அதில் டிஸ்கவர் தேங்க்ஸ் பெனிஃபிட் (Discover Thanks Benefit) பக்கத்துக்கு சென்றால், நெட்பிளிக்ஸ் பெனிஃபிட் (Netflix Benefit) தோன்றும். அங்கேயே கிளைம் பட்டன் இடம்பெற்றிருக்கும். அதை கிளிக் செய்து, ப்ரொசீடு (Proceed) கொடுங்கள். இப்போது, உங்களது நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும். இதே விலையில் ஜியோவிலும் ஒரு நெட்பிளிக்ஸ் திட்டம் இருக்கிறது.

ஜியோ ரூ 1499 திட்ட விவரங்கள் (Jio Rs 1499 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல் ஓடிடி மற்றும் ஜியோ அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா (Jio Unlimited True 5G Data) சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 3 ஜிபி வீதம் மொத்தமாக 252 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.

முந்தைய திட்டத்தை போலவே நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்துகொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் சலுகை கிடைக்கிறது. இந்த தினசரி டேட்டா 3 ஜிபியை முழுவதும் பயன்படுத்தினாலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. மேலும், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

இதுபோக நெட்பிளிக்ஸ் பேஸிக் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. மேலும், ஜியோ அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கிறது. இப்படி இரண்டு திட்டங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சலுகைகளை கொண்டுள்ளன. இந்த திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இருப்பினும், ஏர்டெல் ஜியோவுக்கு நிகரான சலுகை வழங்குவதால் வாடிக்கையாளர்களிடையே கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 1499 Plan With 84 Days Validity 3GB Daily Data, Voice Calling Netflix Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X