Home
News

ஆல் இன் ஒன் ஆஃபர்.. ஓடிடி சந்தா.. 300 எம்பிபிஎஸ் வேகம்.. 3300ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. என்ன விலை?

ஜியோ நிறுவனத்துக்கு நிகராக ஏர்டெல்லின் ரூ 1498 திட்டத்தில் (Airtel Rs 1498 Plan) 300 எம்பிபிஎஸ் வேக இன்டர்நெட், 3,300 ஜிபி டேட்டா, முன்னணி ஓடிடி தளங்களில் சப்கிரிப்ஷன் போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் முழு விவரம் இதோ.

வீட்டில் இருந்து வேலை செய்யும் நபர்கள், ஓடிடி தளங்களில் விரும்பி வீடியோ பார்க்கும் நபர்கள், லேண்ட்லைன் கனெக்சன் தேவைப்படும், டிவிக்கு இன்டர்நெட் தேவைப்படும் நபர்கள் போன்ற பெரும்பாலானோருக்கு ஒரே திட்டத்தில் அனைத்து சலுகைகளையும் கொடுக்கும் விதமாக ஏர்டெல் ரூ 1498 திட்டம் இருக்கிறது.

ஆல் இன் ஒன் பிளான்.. ஓடிடி சந்தா.. 3300ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

ஏர்டெல் ரூ 1498 திட்ட விவரங்கள் (Airtel Rs 1498 Plan Details): இதுவொரு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டமாகும். இந்த திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் தடையில்லா இன்டர்நெட் சேவை வழங்கப்படும். அதிகபட்சமாக 3,300 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆகவே, நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 110 ஜிபி டேட்டா கிடைக்கும். அதோடு லேண்ட்லைன் கனெக்சனும் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை செய்து கொள்ளலாம். மேலும் ஓடிடி (OTT) மற்றும் விஐபி சர்வீஸ் (VIP Service) சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதாவது, இந்த திட்டத்தில் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போக, அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பீரிமியம் (Airtel Xstream Premium), விஐபி சர்வீஸ் (VIP service), அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) மற்றும் வின்க் மியூசிக் பீரிமியம் (Wynk Music Premium) சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும்.

இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பீரிமியம் சப்ஸ்கிரிப்ஷனில் ஈராஸ்நவ் (ErosNow), சோனிலிவ் (SonyLiv), லையன்ஸ்கேட்பிளே (LionsgatePlay), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), டிவோ (Divo) மற்றும் ஹங்கமா பிளே (HungamaPlay) உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும். இப்படி ஏராளமான சலுகைகளை இந்த ரூ 1498 திட்டம் கொண்டுள்ளது.

ஒருவேளை உங்களுக்கு டிவி, கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்ற அனைத்து டிவைஸ்களிலும் அதிவேக இன்டர்நெட் சேவை வேண்டுமென்றால், ரூ 3999 விலையில் மற்றொரு ஃபைபர் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

ஏர்டெல் ரூ 3999 திட்ட விவரங்கள் (Airtel Rs 3999 Plan Details): இந்த திட்டத்தில் உங்களுக்கு 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்திலும் நாளொன்றுக்கு 110 ஜிபி வீதம் 3300 ஜிபி டேட்டாவை அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதோடு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்கள் சலுகைகள் கொண்ட லேண்ட்லைன் கனெக்சன் வழங்கப்படும்.

இந்த திட்டத்திலும், அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் பேஸிக், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பீரிமியம், விஐபி சர்வீஸ், அப்பல்லோ 24/7 சர்கிள் மற்றும் வின்க் மியூசிக் பீரிமியம் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு ஃபைபர் திட்டங்களுக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டங்களை பெற ஏர்டெல்.காம் (airtel.com) வெப்சைட்டுக்கு சென்று ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் பக்கத்தை அணுக வேண்டும். அதில், உங்களது பெயர், மொபைல் நம்பர் மற்றும் இருப்பிடத்தை கொடுத்தால், அருகில் இருக்கும் ரீடெயில் ஸ்டோர்களின் முகவரியை அறிந்துக் கொள்ள முடியும். அதன்பின் உங்களுக்கு பிடித்தமான திட்டங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1498 Plan With 300 Mbps Speed 3300 GB Data, Unlimited Voice Calls, OTT Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X