Home
News

Airtel பேட்ட போடு.. வெறும் ரூ.149 போதும்.. 1GB டேட்டா.. 22 ஓடிடி ஆப்கள்.. குஷியில் யூசர்கள்.. வாய்ஸ் கால்கள்?

பார்தி ஏர்டெல் (Bharti Airtel) கஸ்டமர்களுக்கு இதைவிட என்ன வேண்டும் என்ற சொல்லும் அளவுக்கு வெறும் ரூ.149 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் 1 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், சோனிலிவ் உள்ளிட்ட 22 ஓடிடி ஆப்களை கொடுக்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள் சலுகை இருக்கிறதா? திட்டத்தின் வேலிடிட்டி எப்படி? ஓடிடி ஆப்களுக்கு எத்தனை நாள் சந்தா கிடைக்கும் உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த திட்டம் அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கிடைக்காது. இருப்பினும், 1 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். அதேபோல ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தாவின் கீழ் 22 ஓடிடி ஆப்களின் சந்தா பெற்று கொள்ளலாம். இதே சலுகையுடன் வாய்ஸ் கால்கள் திட்டமும் இருக்கிறது.

Airtel பேட்ட போடு.. வெறும் ரூ.149 போதும்.. 1GB டேட்டா.. 22 ஓடிடி ஆப்!

முதலில் இந்த திட்டத்தில் கிடைக்கும் ஓடிடி ஆப்களை பார்த்துவிட்டு அந்த திட்டத்துக்கு செல்வோம். இந்த திட்டத்தில் கிடைக்கும் ஓடிடி ஆப்களை பார்க்கையில், சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), மனோரமா மேக்ஸ் (Manorama Max), எபிக் ஆன் (Epic On), கான்ச்சா லங்கா (Kanccha Lanka), டாலிவுட்பிளே (Dollywood Play) மற்றும் அல்ட்ரா (Ultra) சந்தா கிடைக்கிறது.

மேலும், ஈராஸ் நவ் (Eros Now), கிளிக் (Klikk), ஹங்கமா (Hungama), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), ஹோய்சோய் (HoiChoi), டாகுபே (Docubay), சாவ்பால் (Chaupal), ஃபேன் கோட் (Fan Code), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix), டாலிவுட்பிளே (Dollywood Play), அல்ட்ரா (Ultra), ஷீமாரூமீ (Shemaroome) மற்றும் சோஷியல் ஸ்வாக் (Social Swag) ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது.

மேலும், டிவோ (DIVO) ஆப்பின் சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு உங்களது ஆக்டிவ் திட்டத்தின் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இருப்பினும், ஓடிடி ஆப்களை 30 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஓடிடி ஆப்களின் சலுகையுடன் மலிவான விலைக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையும் வேண்டுமானால், மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது.

இந்த திட்டத்தின் விலை ரூ.549ஆக இருக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஓடிடி ஆப்களின் சந்தா மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஏர்டெல்லில் கிடைக்கும் பிரத்யேக சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதுபோக டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 3 ஜிபி டேட்டா தினமும் கிடைக்கும்.

இந்த டேட்டாவுடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது. வாய்ஸ் கால்களை பொறுத்தவரையில், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. வழக்கமாக கொடுக்கப்படும் 100 எஸ்எம்எஸ் சலுகை தினமும் கிடைக்கிறது. மேலும், அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சலுகை வருகிறது.

இதுபோக இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சலுகைகளை பெற்று கொள்ளலாம். ஓடிடி ஆப்களின் சலுகைகளை பார்க்கையில், முந்தைய திட்டத்தின் கிடைத்ததை போலவே ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தாவின் 22 ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். 3 மாதங்களுக்கு டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 149 Plan With 1GB Data Xstream Play Premium Access 22 OTT Apps Cheapest OTT Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X