Home
News

மிரளுது ஜியோ.. வெறும் ரூ.148 போதும்.. 12 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்.. 15ஜிபி டேட்டா.. பேஸ் வேலிடிட்டி!

ஜியோ (Jio) வாடிக்கையாளர்களே மிரளும் விதமாக ஏர்டெல் (Airtel) நிறுவனம், வெறும் ரூ.148 மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டத்தில் 15 ஜிபி டேட்டா மற்றும் பேஸ் பிளான் வேலிடிட்டியோடு 12 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனை கொடுக்கிறது. இந்த திட்டம் குறித்த விவரம் இதோ.

ஏர்டெல் ரூ 148 திட்ட விவரங்கள் (Airtel Rs 148 Plan Details): ஏர்டெல்லில் மிகவும் குறைவான விலையில் டேட்டாவுடன் ஓடிடி சலுகை கிடைக்கும் ஒரே திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 15 ஜிபி லம்ப்சம் டேட்டா சலுகை கொடுக்கப்படும். வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படாது.

 ரூ.148 போதும்.. 12 ஓடிடி சந்தா.. 15ஜிபி டேட்டா.. பேஸ் வேலிடிட்டி!

ஆனால், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. இதன் கீழ் மொத்தம் 12 ஓடிடி ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில், சோனிலிவ் (SonyLiv), லையன்ஸ்கேட்பிளே (LionsgatePlay), ஈராஸ்நவ் (ErosNow), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), ஷீமரூமி (Shemaroome), நம்மபிளிக்ஸ் (Nammaflix) டிவோ (Divo), அல்ட்ரா (Ultra), க்ளிக் (Klikk) மற்றும் ஹங்கமா பிளே (HungamaPlay) உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுவொரு ஏர்டெல் டேட்டா வவுச்சர் (Airtel Data Voucher) திட்டம் என்பதால், பேஸ் ப்ரீபெய்ட் திட்டம் (Base Prepaid Plan) ஆக்டிவாக இருக்க வேண்டும். அந்த திட்டத்தின் வேலிடிட்டி முடியும் வரை, இந்த சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும். ஒருவேளை உங்களுக்கு தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளோடு ஓடிடி திட்டம் வேண்டுமானால், ரூ 399 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.

ஏர்டெல் ரூ 399 திட்ட விவரங்கள் (Airtel Rs 399 Plan Details): இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 74 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ள முடியும். அதே போல தினசரி 100 எஸ்எம்எஸ்களை அனுப்பிக் கொள்ளலாம்.

 ரூ.148 போதும்.. 12 ஓடிடி சந்தா.. 15ஜிபி டேட்டா.. பேஸ் வேலிடிட்டி!

அதோடு முந்தைய திட்டத்தைப் போலவே ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளேவின் கீழ் 12 ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். இந்த சலுகைகள் போக அப்பல்லோ 24/7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Airtel Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதேபோல சலுகைகளுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சப்ஸ்கிரிப்ஷன் வேண்டும் என்றால், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ 499 விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் ரூ 499 திட்ட விவரங்கள் (Airtel Rs 499 Plan Details): இந்த திட்டத்திலும் 3 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் மற்றும் ஏர்டெல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது.

 ரூ.148 போதும்.. 12 ஓடிடி சந்தா.. 15ஜிபி டேட்டா.. பேஸ் வேலிடிட்டி!

இந்த சலுகைகள் போக 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்படுகிறது. அதே போல அப்பல்லோ 24/7 சர்க்கிள், ப்ரீ ஹாலோடியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சப்ஸ்கிரிப்ஷனை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 148 Plan With 15GB Data Base Plan Validity OTT Subscription Check Data Voucher Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X