2024இல் இதான்பா.. ரூ.148 போதும்.. 15+ ஓடிடி சந்தா.. 10 ஜிபி டேட்டா.. ஏர்டெல் கஸ்டமர்களுக்கு இந்தாண்டு!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு வெறும் ரூ.148 விலையில் கொடுக்கப்படும் 15+ ஓடிடி சலுகைகள் கொண்ட திட்டம் முதல் அதிகபட்சமாக 50 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கும் திட்டம் வரையில் 2024ஆம் கிடைக்கும் டேட்டா பேக்குகள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஏர்டெல் ரூ 19 திட்ட விவரங்கள் (Airtel Rs 19 Plan): இதுவொரு எண்ட்ரீ-லெவல் பேஸிக் டேட்டா திட்டமாகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 1 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த திட்டத்துக்கு 1 நாள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 1 எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ 29 திட்ட விவரங்கள் (Airtel Rs 29 Plan): இந்த டேட்டா திட்டத்தில் 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் 1 நாள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. பேஸ் பிளான் திட்டத்தில் டேட்டா காலியாகும் வேளையில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் திட்டமாக, இந்த 2 ஜிபி டேட்டா திட்டம் இருக்கிறது.
ஏர்டெல் ரூ 49 திட்ட விவரங்கள் (Airtel Rs 49 Plan): இந்த டேட்டா வவுச்சரில் முந்தைய திட்டங்களைவிட கூடுதல் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தில் மொத்தமாக 6 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 1 ஜிபிக்கு ரூ.8 மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால், 1 ஜிபியை தனியாக ரீசார்ஜ் செய்தால், ரூ.19 தேவைப்படுகிறது.
ஏர்டெல் ரூ 58 திட்ட விவரங்கள் (Airtel Rs 58 Plan): இந்த டேட்டா திட்டமானது, முந்தைய திட்டங்களை போலல்லாமல், பேஸ் பிளான் வேலிடிட்டி சலுகை கொடுக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தின் டேட்டாவை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தில் 3 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. அதோடு 2 ஜிபிக்கான டேட்டா கூப்பன் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ 65 திட்ட விவரங்கள் (Airtel Rs 65 Plan): இந்த டேட்டா திட்டத்துக்கும் பேஸ் பிளான் வேலிடிட்டி (Base Plan Validity) வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 4 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதோடு 2 ஜிபிக்கான ப்ரீ டேட்டா கூப்பன் வழங்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 6 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.

ஏர்டெல் ரூ 99 திட்ட விவரங்கள் (Airtel Rs 99 Plan): இந்த திட்டத்தில் அதிகப்படியான டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். நளொன்றுக்கு 20 ஜிபி டேட்டா வீதம் மொத்தம் 40 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த 20 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா வேகம் குறைப்படும்.
ஏர்டெல் ரூ 118 திட்ட விவரங்கள் (Airtel Rs 118 Plan): இந்த டேட்டா திட்டத்தில் பேஸ் பிளான் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 12 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.10 செலவில் 1 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்.
ஏர்டெல் ரூ 148 திட்ட விவரங்கள் (Airtel Rs 148 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 15 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதோடு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளேவின் கீழ் சோனிலிவ், ஈராஸ்நவ் உள்ளிட்ட 15+ ஓடிடியை பயன்படுத்தலாம்.
ஏர்டெல் ரூ 181 திட்ட விவரங்கள் (Airtel Rs 181 Plan Details): இந்த திட்டத்தில் டெய்லி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 1 ஜிபி வீதம் மொத்தமாக 30 ஜிபி டேட்டா சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.
ஏர்டெல் ரூ 301 திட்ட விவரங்கள் (Airtel Rs 301 Plan Details): ஏர்டெல்லில் அதிகப்படியான டேட்டா சலுகை கொண்ட திட்டமாக இந்த டேட்டா பேக் இருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 50 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவை பேஸ் பிளான் வேலிடிட்டி முடியும் வரையில் பயன்படுத்தலாம். அதோடு விங்க் மியூசிக் பிரீமியம் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








