Home
News

வாயா சாமி.. இனி Airtel ஆட்டமே வேற.. ரூ.149 போதும்.. 20+ ஓடிடி சந்தா.. 15GB டேட்டா.. பேஸ் வேலிடிட்டி!

ஜியோ கஸ்டமர்களே திக்குமுக்காடும்படி ரூ.148 மதிப்பிலான திட்டத்தில் சோனிலிவ், ஈராஸ்நவ் போன்ற 20+ ஓடிடி ஆப்களின் சந்தா, 15 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், பேஸ் வேலிடிட்டி சலுகையையும் ஏர்டெல் நிறுவனம் கொடுக்கிறது. இதுபோன்ற மலிவு விலை ஓடிடி திட்டங்களின் சலுகைகளை பார்ப்போம்.

ஏர்டெல் ரூ 699 திட்ட விவரங்கள் (Airtel Rs 699 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இந்த 3 ஜிபிக்கு பிறகு 64கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

Airtel ஆட்டமே வேற.. ரூ.149 போதும்.. 20+ ஓடிடி சந்தா.. 15GB டேட்டா!

இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். 84 நாட்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கொடுக்கப்படுகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால் (Roaming Call) சலுகை கிடைக்கிறது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play), அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle), ப்ரீ ஹலோட்யூன்ஸ் (Free Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சலுகை கிடைக்கிறது. இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தாவின் கீழ் சோனிலிவ், ஈராஸ்நவ் போன்ற 20+ ஓடிடிகளை பயன்படுத்தலாம். 84 நாட்கள் வேலிடிட்டி வருகிறது.

ஏர்டெல் ரூ 499 திட்ட விவரங்கள் (Airtel Rs 499 Plan Details): இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 84 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது.

அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அப்பல்லோ 24|7 சர்கிள், ப்ரீ ஹலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகை வருகிறது. இதுபோக 3 மாதங்களுக்கான டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பயன்படுத்தலாம்.

ஏர்டெல் ரூ 399 திட்ட விவரங்கள் (Airtel Rs 399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Call) மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. தினசரி 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

84 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அப்பல்லோ 24|7 சர்கிள், ப்ரீ ஹலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் சலுகைகள் வருகின்றன. அதேபோல ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சலுகையில் கீழ் 20+ ஓடிடி தளங்களின் சந்தாவை பயன்படுத்த முடியும். 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ 359 திட்ட விவரங்கள் (Airtel Rs 359 Plan Details): இந்த திட்டத்துக்கு 1 மாதம் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே, அன்லிமிடெட் 5ஜி, அப்பல்லோ 24|7 சர்கிள் சலுகைகளும் வருகிறது

ஏர்டெல் ரூ 148 திட்ட விவரங்கள் (Airtel Rs 148 Plan Details): ஏர்டெல் ஓடிடி திட்டங்களில் இது மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, 15 ஜிபி டேட்டா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளேவின் கீழ் 20+ ஓடிடி தளங்களின் சந்தாவை பயன்படுத்தலாம். பேஸ் பிளான் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 148 Plan Offer 20 OTT Subscription, 15GB Data, Base Plan Validity Check Entertainment Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X