ஜியோ VS ஏர்டெல்.. ரூ.149 மற்றும் 148 ப்ரீபெய்ட் திட்டங்களில் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன? எது சிறந்தது?
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. மேலும் இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டன.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது சமீபத்தில் ஜியோ நிறுவனம் தனது ரூ.119 ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கியது. குறிப்பாக இந்த ஜியோ ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1.5ஜிபி டெய்லி டேட்டா மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜியோ ரூ.119 திட்டத்திற்கு பதிலாக ரூ.149 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுவந்துள்ளது ஜியோ நிறுவனம். அதேபோல் ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்திற்கு போட்டியாக ரூ.148 விலையில் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இப்போது இந்த இரண்டு திட்டங்களில் எது அதிக நன்மைகளை வழங்குகிறது என்பதைப் பார்ப்போம்.
ஜியோ (jio) ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 1 ஜிபி டெய்லி டேட்டா (1GB Daily Data) மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் (100 SMS/Day) சலுகைகளை வழங்குகிறது. இதுதவிர ஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud), ஜியோ டிவி (JioTV) ஆகியவற்றின் சந்தாவும் கிடைக்கும். அதேபோல் ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட திட்டம் ஆனது 20 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 15ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 15ஜிபி டேட்டாவிற்கு எந்தவிதமான தனிப்பட்ட செல்லுபடியும் கிடையாது மாறாக இது உங்களுடையய மெயின் அல்லது ஆக்டிவ் ரீசார்ஜின் வேலிடிட்டி (Main or Active Recharge Validity) உடன் ஒற்றுப்போகும். ஏர்டெல் ரூ.148 திட்டமானது எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே ப்ரீமியம் (Xstream Play Premium) உடன் வருகிறது.
எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிளாட்ஃபார்ம் வழியாக 15 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுக்கான அணுகல்களை ஒரே இடத்தில் வழங்குகிறது ஏர்டெல். ஆனால் வாய்ஸ் கால்கள் அல்லது எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்காது. அதாவது இந்த ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டேட்டா வவுச்சர் ஆகும்.
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டத்தையும் வைத்துள்ளது. அதன்படி ஏர்டெல் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு வரம்பற்ற அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் ஏர்டெல் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 1ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது.

எது சிறந்தது? ஏர்டெல் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம் 15ஜிபி டேட்டா, எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே ப்ரீமியம் மட்டுமே வழங்குகிறது. ஆனால் எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வழங்கவில்லை. அதேபோல் ஏர்டெல் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இதில் டேட்டா நன்மை இல்லை.
அதேசமயம் ஜியோ நிறுவனம் தற்போது வழங்கும் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 20ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. எனவே ஏர்டெல்லின் ரூ.155 மற்றும் ரூ.148 ப்ரீபெயட் திட்டங்களை விட ஜியோ நிறுவனத்தின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் சிறந்தது ஆகும். அதேபோல் ஜியோ நிறுவனம் நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








