Home
News

Airtel SIM கார்டு இருக்கா.. இனிமேல் ரூ.1399 போதும்.. 4 சிம் கார்டுகளுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா.. OTT சந்தா!

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு ஒரே திட்டத்தில் பல்வேறு சிம் கார்டுகளுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா கொடுக்கப்படுகிறது. இதற்கு கூடுதல் செலவு கிடையாது. இதில் ஏர்டெல் ரூ.1399 போஸ்ட்பெய்ட் ஃபேமிலி திட்டமானது, 4 சிம் கார்டுகளுக்கு சலுகைகளை கொடுத்து பட்டையை கிளப்பி வருகிறது.

ஏர்டெல் ரூ.1399 போஸ்ட்பெய்ட் ஃபேமிலி திட்டம் (Airtel Rs 1399 Postpaid Family Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 1 பிரைமரி சிம் கார்டு மற்றும் 3 செகண்டரி சிம் கார்டுகளுக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். ஆகவே, 4 சிம் கார்டுகளுக்கும் டேட்டா, வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படும்.

Airtel SIM கார்டு இருக்கா.. இனிமேல் ரூ.1399 போதும்.. 4 சிம் கார்டுகள்!

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கிடைக்கும் டேட்டாவுக்கு தினசரி லிமிட் கிடையாது. ஏனென்றால், அன்லிமிடெட் 4ஜி டேட்டா (Unlimited 4G Data) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது.

ஆகவே, அடுத்த பில் சைக்கிள் வரும் வரையில் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். 4ஜி கஸ்டமர்களாக இருந்தாலும், அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். 5ஜி கஸ்டமர்களாக இருந்தாலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும். மேலும் 5ஜி சிலைசிங்குடன் ஃபாஸ்ட் லேன் டெக்னாலஜி (Fast Lane Technology) கிடைக்கிறது.

ஆகவே, கூடுதல் வேகத்தில் டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஏர்டெல் ரூ.1399 போஸ்ட்பெய்ட் ஃபேமிலி திட்டத்தில் ஒட்டுமொத்த பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது. இதில் நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic), அமேசான் பிரைம் (Amazon Prime) சந்தா கிடைக்கிறது. இந்த பிரைம் சந்தாவை 6 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், ஆப்பிள் டிவி (Apple TV) சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜியோஹாட்ஸ் மொபைல் சந்தாவை (JioHotstar Mobile Subscription) இந்த ஏர்டெல் ரூ.1399 போஸ்ட்பெய்ட் ஃபேமிலி திட்டம் கொடுக்கிறது. இந்த சந்தாவை 1 வருடத்துக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா கிடைக்கிறது.

இந்த ஒரே சந்தாவில் சோனிலிவ் உள்ளிட்ட கூடுதல் ஓடிடி சந்தாக்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஓடிடி பிரியர்கள் மட்டுமல்லாமல், மியூசிக் பிரியர்களுக்கும் இந்த ஏர்டெல் ரூ.1399 போஸ்ட்பெய்ட் ஃபேமிலி திட்டம் சலுகைகளை கொடுத்துள்ளது. ஆகவே, ஆப்பிள் மியூசிக் (Apple Music) சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக கிளவுட் ஸ்டோரேஜ் சலுகை கிடைக்கிறது.

ஆகவே, 100 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கும்படி கூகுள் ஒன் (Google One) அணுகல் கிடைக்கிறது. 12 மாதங்களுக்கு இலவமாக அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ப்ளூ ரிப்பன் பேக் (Blue Ribbon Bag) சலுகையும் கிடைக்கிறது.

இந்த திட்டத்துக்கு ஜிஎஸ்டி கட்டணம் இருக்கும். ஆனால், சிம் கார்டுகளை இணைக்க கட்டணம் ஏதும் கிடையாது. இதே விலைக்கு 4 சிம் கார்டுகளுக்கு சலுகைகளை கொடுக்கும். ஜியோவில் இதை மலிவான விலைக்கு ஃபேமிலி சிம் கார்டு திட்டம் கிடைக்கும். ஆனால், கூடுதல் சிம் கார்டுகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஜிஎஸ்டி கட்டணமும் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 1399 Postpaid Family Plan With Unlimited Voice Calls 4G Data For 1 Regular 3 Free SIMs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X