Home
News

Airtel போட்ட போடு.. ரூ.1399-க்கு 4 சிம் கார்டுகள்.. அன்லிமிடட் வாய்ஸ் கால்கள், டேட்டா.. பிரீமியம் OTT சந்தா!

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் (Airtel Postpaid) கஸ்டமர்களுக்கு பல்வேறு ஃபேமிலி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரே குடும்பத்தில் பலர் ஏர்டெல் சிம் கார்டுகளை பயன்படுத்தும் நிலையில், தனித்தனியாக ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக ஃபேமிலி போஸ்ட்பெய்டு (Family Postpaid) திட்டத்தை தேர்வு செய்யலாம். ரூ.1,399 விலையில் கிடைக்கும் ஏர்டெல் ஃபேமிலி திட்டம் (Airtel Family Postpaid) திட்டம் 4 சிம் கார்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.

இந்த ரூ.1,399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஒரு பிரைமரி (Primary) அல்லது பேரன்ட் (Parent) சிம் கார்டுடன் மேலும் 3 ஆட்-ஆன் சிம்களை (Add-on SIMs) இணைத்துக் கொள்ள முடியும். இதனால் மொத்தம் 4 சிம் கார்டுகளுக்கும் ஒரே ஃபேமிலி திட்டத்தின் கீழ் சேவைகளை பயன்படுத்த முடியும். கூடுதல் ஆட்-ஆன் கனெக்சன்களை திட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

Airtel போட்ட போடு.. ரூ.1399-க்கு 4 சிம் கார்டுகள்.. அன்லிமிடட் வாய்ஸ்!

இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகிறது. லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் ஆகியவற்றை இந்த ஃபேமிலி திட்டம் மூலம் பயன்படுத்த முடியும். மேலும், பேரன்ட் மற்றும் ஆன்-ஆன் கனெக்சன் ஆகியவற்றுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. 4ஜி மற்றும் 5ஜி கஸ்டமர்களுக்கு திட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப டேட்டா சேவை வழங்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், ரூ.1,399 திட்டத்தில் பல்வேறு ஓடிடி மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கான சந்தாக்களும் இடம்பெற்றுள்ளன. நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic) சந்தா கிடைக்கிறது. அதேபோல் அமேசான் பிரைம் (Amazon Prime) சந்தாவை 6 மாதங்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லாமல் பயன்படுத்த முடியும். ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது.

மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சேவைக்கான அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் பல்வேறு ஓடிடி ஆப்களை ஒரே தளத்தில் பயன்படுத்த முடியும். Google One Cloud Storage மற்றும் Adobe Express Premium போன்றவற்றின் சந்தாவும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கூடுதல் பலன்களில் இடம்பெறுகின்றன.

எஸ்எம்எஸ் சேவையை பொறுத்தவரை, தினமும் 100 எஸ்எம்எஸ் வரை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தப்படும் எஸ்எம்எஸ்களுக்கு திட்ட விதிமுறைகளின்படி கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.1,399 என்பது திட்டத்தின் மாதாந்திர பில் சைக்கிளாகும். ஆகவே, ஜிஎஸ்டி கட்டணம் பொருந்தும்.

அதே நேரத்தில், திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆட்-ஆன் சிம் கார்டுகளுக்கு தனியாக மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆகவே, ஒரே குடும்பத்தில் 4 பேர் ஏர்டெல் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருபவர்கள் தனித்தனியாக மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக இந்த ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தை பரிசீலிக்கலாம்.

குறிப்பாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் ஓடிடி சந்தாக்கள் அனைத்தையும் ஒரே திட்டத்தில் பெற விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கும். ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு இதுபோன்று ஃபேமிலி சிம் கார்டுகளை இணைக்கும் சலுகை கிடைக்காது. அதேபோல ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களில் கூடுதலாக இணைக்கும் சிம் கார்டுகளுக்கு தனியாக கட்டணம் இருக்கும். ஆனால், இதில் இலவசமாக கிடைக்கிறது. அதே நேரத்தில் விலையிலும் அதிமாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel Rs 1399 Postpaid Family Plan 4 SIMs Unlimited Calls Data Netflix Prime Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X