ஒத்த ரீசார்ஜ் போதும்.. 4 சிம் கார்டுக்கு அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா.. 1 வருட ஜியோஹாட்ஸ்டார் சந்தா!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு கூடுதல் செலவு இல்லாமல், ஃபேமிலி சிம் ஆட்-ஆன் சலுகை கிடைக்கிறது. இப்போது, பார்க்க இருக்கும் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ரெகுலர் சிம் கார்டு மட்டுமல்லாமல், கூடுதலாக 3 சிம் கார்டுகளுக்கும் சலுகைகள் கொடுக்கப்படும். மேலும், ஓடிடி, கிளவுட் ஸ்டோரேஜ் சலுகைகளும் கிடைக்கிறது. இதுகுறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
4 சிம் கார்டுகளுக்கு சலுகைகளை கொடுக்கும் திட்டமாக ஏர்டெல் ரூ. 1399 போஸ்ட்பெய்ட் இருக்கிறது. இந்த விலையுடன் ஜிஎஸ்டி கட்டணமும் கூடுதலாக இருக்கும். சிம் கார்டை ஆட்-ஆன் செய்ய கட்டணம் வசூலிக்கப்படாது. அதேபோல 4 சிம் கார்டுகளுக்கும் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா கிடைக்கும். ஓடிடி சலுகைகள் ரெகுலர் சிம் கார்டுக்கு மட்டும் கொடுக்கப்படும்.

ஏர்டெல் ரூ.1399 திட்ட விவரங்கள் (Airtel Rs 1399 Plan Details): மாதத்துக்கு 240 ஜிபி டேட்டா சலுகையை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இதில் 150 ஜிபி டேட்டாவை ரெகுலர் சிம் கார்டில் பயன்படுத்தி கொள்ளலாம். 30 ஜிபி டேட்டா ஆட் செய்யப்படும் சிம் கார்டுகளுக்கு கிடைக்கும். 4 சிம் கார்டுகளுக்கும் அன்லிமிடெட் கால்கள் (Unlimited Calls) கொடுக்கப்படும்.
இதில் லோக்கல் & எஸ்டிடி ரோமிங் (Llocal & STD Roaming) கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. இந்த சலுகைகள் போக ஓடிடி மற்றும் கிளவுட் ஸ்டோர்ஜ் சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, 100 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) சலுகைகளுடன் கூகுள் ஒன் (Google One) சந்தா கொடுக்கப்படுகிறது.
மேலும், நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic) ஓடிடி சந்தாவை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கிடைக்கிறது. 6 மாதங்களுக்கு இந்த ஓடிடி சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஆப்பிள் டிவி (Apple TV), ஆப்பிள் மியூசிக் (Apple Music) மற்றும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த ஹாட்ஸ்டார் சந்தாவானது, 1 வருடத்துக்கு பயன்படுத்த கிடைக்கும். இவ்வளவு ஓடிடி ஆப்கள் போக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தாவும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை கிடைத்து உள்ளது.
மேலும், ப்ராடு டிடெக்சன் (Fraud Detection) சலுகை கிடைக்கிறது. ஸ்பேம் அலெர்ட் (Spam Alerts) கொடுக்கப்பட்டு உள்ளது. ப்ளூ ரிப்பன் பேக் (Blue Ribbon Bag) சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரே சிம் கார்டுக்கு மட்டும் சலுகைகள் வேண்டுமானால், ஏர்டெல் ரூ. 449 திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதிலும் ஓடிடி மற்றும் கூடுதல் சலுகைகள் குறையில்லாமல் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ. 449 திட்ட விவரங்கள் (Airtel Rs 449 Plan Details): இதில் 1 சிம் கார்டுக்கு மட்டுமே சலுகை கிடைக்கும். ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, எஸ்டிடி ரோமிங் கொடுக்கப்படும். 50 ஜிபி டேட்டா மற்றும் நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டம் கொடுத்துள்ளது. 100 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைத்துள்ளது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தா கிடைக்கும்.
ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கிறது. இதை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா 12 மாதங்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. பிராடு டிடெக்சன் மற்றும் ஸ்பேம் அலெர்ட் கிடைக்கிறது. ப்ளூ ரிப்பன் பேக் சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டங்களில் தேவைக்கு ஏற்ப ஆப்ஷனை போஸ்ட்பெய்ட் கஸ்டமர்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








