Home
News

ஏர்டெல்லில் கம்மி விலையில் இப்படி ஒரு திட்டமா? இப்போ அனைத்து இடங்களிலும் கிடைக்கும் திட்டம் இதுதான்!

டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை எதிர்த்து நிற்கும் தலை சிறந்த நிறுவனமாக பாரதி ஏர்டெல் நிறுவனம் திகழ்கிறது. ஜியோவின் பல திட்டங்களுக்கு சவால் விடும் விதத்தில், ஏர்டெல் நிறுவனமும் பல புதிய திட்டங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்து தான் வருகிறது. அந்த வரிசையில் அன்லிமிடெட் கால்லிங் நன்மையுடன் ஏர்டெல் அறிமுகம் செய்த திட்டங்கள் தான் ரூ.129 மற்றும் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்.

ரூ .129 மற்றும் ரூ .199 ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரூ .129 மற்றும் ரூ .199 ப்ரீபெய்ட் திட்டங்கள்

இந்த ஆண்டு மே மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வட்டங்களில் மட்டுமே ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டங்களை அறிமுகம் செய்தது. அன்லிமிடெட் கால்லிங் நன்மையுடன் டேட்டா பயனையும் வழங்கும் இந்த ரூ .129 மற்றும் ரூ .199 ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், தற்பொழுது இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களையும் ஏர்டெல் நிறுவனம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது.

அதிகரிக்கப்பட்டுள்ள இடங்கள்

அதிகரிக்கப்பட்டுள்ள இடங்கள்

கடந்த ஜூலை மாதம், ஏர்டெல் நிறுவனம் ரூ .129 மற்றும் ரூ .199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை தில்லி என்.சி.ஆர், அசாம், பிகார், ஜார்க்கண்ட், மும்பை, வடகிழக்கு பகுதிகள், ஒடிசா, குஜராத், ஹரியானா, கேரளா, கொல்கத்தா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் கோவா, ராஜஸ்தான், உ.பி. கிழக்கு, உ.பி. மேற்கு மற்றும் உத்தரகண்ட், மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் அறிமுகம் செய்தது.

தமிழ்நாட்டிலும் அன்லிமிடெட் கால்லிங்

தமிழ்நாட்டிலும் அன்லிமிடெட் கால்லிங்

தற்பொழுது இந்த அன்லிமிடெட் கால்லிங் திட்டங்கள் தமிழ்நாட்டிலும் கிடைக்கிறது. ஏர்டெல்லின் இந்த ரூ .129 மற்றும் ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டங்களுடன், ஏர்டெல் ரூ .99 ப்ரீபெய்ட் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது, ஆனால் இந்த திட்டம் இன்னும் சில வட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலிவு விலை திட்டங்களின் கீழ் பயனர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ .129 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ .129 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ .129 ப்ரீபெய்ட் திட்டம், 24 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு அன்லிமிடெட் கால்லிங் நன்மை கிடைக்கிறது. இத்துடன் ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்தின் கீழ் 1 ஐபி டேட்டா நன்மையையும் ஏர்டெல் வழங்கியுள்ளது. அதேபோல், இந்த திட்டத்தின் கீழ் மொத்தமாக 300 எஸ்எம்எஸ் நன்மையும், கூடுதல் நன்மையாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சேவை, இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் நன்மையும் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ .199 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ .199 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல்லின் ரூ .199 ப்ரீபெய்ட் திட்டமானதும் 24 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. ஆனால், இத்திட்டம் பயனர்களுக்கு அன்லிமிடெட் கால்லிங் நன்மையை வழங்குவதுடன், தினமும் 1 ஜிபி டேட்டா நன்மையையும் வழங்குகிறது. அதுபோல், வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் கூடுதல் நன்மையாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சேவை, இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் நன்மையும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Rs 129 and Rs 199 Prepaid Plans Now Available On All Over India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X