Airtel ரீசார்ஜ் பிச்சிக்குது.. இனி 84 நாட்களுக்கு அன்லிமிடெட்.. வாய்ஸ் கால்கள்.. 2.5ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!
ஏர்டெல் (Airtel) ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு ஒரே திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 23+ ஓடிடி ஆப்களின் சந்தா போன்ற ஒட்டுமொத்த சலுகைகளும் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படியான சலுகைகளை ஏர்டெல் ரூ 1199 திட்டம் (Airtel Rs 1199 Plan) கொடுக்கிறது. இதுபோக கூடுதல் சலுகைகள் ஏராளமாக கொடுக்கப்படுகின்றன. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு சலுகைகளை பார்த்தால், கஸ்டமர்களுக்கே அது புரிய வரும். இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய சலுகைகள் இருந்தால் போதும், அந்த திட்டத்தை வேலிடிட்டிக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்துவிடுவோம். ஆனால், இதை செய்து பல ஓரிரு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏனென்றால், அன்லிமிடெட் 5ஜி சேவைக்கு பிறகு ஓடிடி ஆப்கள் இருக்கிறதா என்பதையும் பார்த்துவிட்டே ரீசார்ஜ் செய்யும் வழக்கம் வந்துவிட்டது. அதில், இந்த திட்டம் மிரளவிடுகிறது.

ஏனென்றல், பிரீமியம் ஓடிடி ஆப் மற்றும் ஓடிடி பண்டில் என்று ஒட்டுமொத்தமாக 23+ ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுத்து இருக்கிறது. இந்த ஓடிடிகளை பார்ப்பதற்காக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) இந்த திட்டம் பேக் செய்துள்ளது. அதேபோல ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சில முக்கிய சலுகைகளும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் இருக்கிறது.
ஏர்டெல் ரூ 1199 திட்ட விவரங்கள் (Airtel Rs 1199 Plan Details): இந்த பிரீமியம் ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) முன்பே சொன்னதை போல 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைகளை போலவே ஓடிடி சலுகைகளையும் பயன்படுத்தலாம். அதாவது, ஓடிடி சலுகைகளும் 84 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். 90 நாட்களுக்கு எதிர்பார்க்க முடியாது.
நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. ஆகவே, 84 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் ஓடிடி மட்டுமல்லாமல், இன்டர்நெட், சோஷியல் மீடியா போன்ற ஒட்டுமொத்த டேட்டா தேவைக்கும் இந்த திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கிறது.
அதே நேரத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) தொடங்கி எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) வரையில் செய்ய கிடைக்கிறது. இந்த ஏர்டெல் ரூ 1199 திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இப்போது, பிரீமியம் ஓடிடி மற்றும் ஓடிடி பண்டில்களில் கிடைக்கும் ஓடிடி ஆப்களின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
பிரீமியம் ஓடிடி சந்தாவை பார்க்கையில், அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த ஓடிடிக்கு 84 நாட்கள் சந்தா கிடைக்கிறது. இதுபோக ஏர்டெல் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தாவும் இதில் பேக் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, 22+ ஓடிடி ஆப்களை இந்த திட்டத்தில் பெற்று கொள்ள முடியும்.
இதில் சோனிலிவ், லயன்ஸ்கேட் பிளே, ஆஹா, சாவ்பால், ஹோய்சோய், சன்நெக்ஸ்ட் போன்ற ஓடிடி ஆப்களும் கிடைக்கிறது. மேலும், ஸ்பேம் கால்கள், ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் உள்ளது. இதுபோக ரிவார்ஸ்ட் மினி சந்சா கிடைக்கிறது. அதேபோல 30 நாட்களுக்கு இலவச ஹலே டியூன்ஸ் சலுகையை இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








