ஏர்டெல்லுக்கு 2 சாய்ஸ்.. இனி இவ்வளவு ரீசார்ஜ் செய்யதால் மட்டுமே பிரைம் சந்தா.. கூடவே 20+ ஓடிடி ஆப்கள் வருது!
ஏர்டெல் கட்டண உயர்வுக்கு (Airtel Tariff Hike) பிறகு கஸ்டமர்களுக்கு கிடைத்து வந்த ஓடிடி திட்டங்களும் (OTT Plan) மாறிவிட்டன. ஆகவே, 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டுமே இனி அமேசான் பிரைம் வீடியோ சந்தாவை கொடுக்கப் போகின்றன. இந்த ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 5ஜி டேட்டா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சலுகையின் கீழ் 20+ ஓடிடி சந்தாவும் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ 838 திட்ட விவரங்கள் (Airtel Rs 838 Plan Details): இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் நாள்தோறும் 3 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 168 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இந்த திட்டத்துக்கு பொருந்தும்.

மேலும், அன்லிமிடெட், லோக்கல், எஸ்டிடி ரோமிங் வாய்ஸ் கால் சலுகை மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகையை பெற்று கொள்ளலாம். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play), அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), ப்ரீ-ஹலோ டியூன்ஸ் (Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) சலுகைகளும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.
அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தாவை பயன்படுத்தலாம். இந்த சந்தாவும் 56 நாட்களுக்கு மட்டும் கிடைக்கிறது. இதுபோக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சலுகையில் கீழ் சோனிலிவ் (SonyLIV), ஈராஸ் நவ் (Eros Now), ஃபேன் கோட் (Fan Code), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) மற்றும் நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix) ஆப்களின் சந்தா வருகிறது.
ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), எபிக் ஆன் (Epic On), கிளிக் (Klikk), அல்ட்ரா (Ultra), ஹோய்சோய் (HoiChoi), ஷீமாரூமீ (Shemaroome), ஹங்கமா (Hungama), கான்ச்சா லங்கா (Kanccha Lanka), டாகுபே (Docubay), சாவ்பால் (Chaupal), டிவோ (DIVO), டாலிவுட்பிளே (Dollywood Play), சோஷியல் ஸ்வாக் (Social Swag) சலுகையும் வருகிறது.
ஏர்டெல் ரூ 1199 திட்ட விவரங்கள் (Airtel Rs 1199 Plan Details): இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்களுக்கு வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். ஆகவே, 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கிடைக்கிறது. இதுபோக முந்தைய திட்டத்தை போலவே ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சலுகையும் கொடுக்கப்படுகிறது.
சோனிலிவ், ஈராஸ் நவ், ஃபேன் கோட், லயன்ஸ்கேட் பிளே, நம்ம ஃபிளிக்ஸ், ராஜ் டிஜிட்டல் டிவி, மனோரமா மேக்ஸ், ஷார்ட்ஸ் டிவி, எபிக் ஆன், கிளிக், அல்ட்ரா, ஹோய்சோய், ஷீமாரூமீ, ஹங்கமா, கான்ச்சா லங்கா, டாகுபே, சாவ்பால், டிவோ, டாலிவுட்பிளே, சோஷியல் ஸ்வாக் ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுக்கப்படுகிறது.
மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கிறது. டேட்டாவை பார்க்கையில், நாளொன்றுக்கு 2.5 ஜிபி கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் போன்ற ஏர்டெல்லின் பிரத்யேக சலுகைககளும் வருகிறது.


Click it and Unblock the Notifications








