Airtel ரூ.1199 Vs ரூ.999 ரீசார்ஜ்: இந்த இரண்டில் எது பெஸ்ட்? யாருக்கெல்லாம் பெஸ்ட்?

|

வோடபோன் ஐடியா, ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போஸ்ட் பெய்டு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

ஏர்டெல் திட்டங்கள்

ஏர்டெல் திட்டங்கள்

அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199 போஸ்ட் பெய்டு மற்றும் ரூ.999 போஸ்ட் பெய்டு திட்டங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பலன்களை
தான் வழங்குகிறது. இப்போது இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகளை முதலில் பார்ப்போம்.

பட்ஜெட் பிரியர்களே இலக்கு: 6000 எம்ஏஎச் பேட்டரி உடன் போக்கோ சி40 அறிமுகம்- மலிவு விலையில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்!பட்ஜெட் பிரியர்களே இலக்கு: 6000 எம்ஏஎச் பேட்டரி உடன் போக்கோ சி40 அறிமுகம்- மலிவு விலையில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்!

 ஏர்டெல் ரூ.1199 போஸ்ட் பெய்டு திட்டம்

ஏர்டெல் ரூ.1199 போஸ்ட் பெய்டு திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199 போஸ்ட் பெய்டு திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மாதம் 150 ஜிபி டேட்டாவும், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்,ரோலோவர் டேட்டாவாக 200ஜிபியும், 6 மாதத்திற்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கிறது

இதுதவிர ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா, விங்க் பிரீமியம் போன்ற நன்மைகளையும் வழங்குகிறது ஏர்டெல் ரூ.1199 போஸ்ட் பெய்டு திட்டம். அதேபோல்இது ரெகுலர் வாய்ஸ் சேவைகளுக்கு மத்தியில் 2 இலவச ஆட் ஆன் திட்டங்களையும் வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானி ஸ்கெட்ச்: அசுர வளர்ச்சியில் ஜியோ., விட்டதை பிடிக்கும் ஏர்டெல்- பரிதாப நிலையில் விஐ!அம்பானி ஸ்கெட்ச்: அசுர வளர்ச்சியில் ஜியோ., விட்டதை பிடிக்கும் ஏர்டெல்- பரிதாப நிலையில் விஐ!

ஏர்டெல் ரூ.999 போஸ்ட் பெய்டு திட்டம்

ஏர்டெல் ரூ.999 போஸ்ட் பெய்டு திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 போஸ்ட் பெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மாதம் 100 ஜிபி டேட்டாவும், தினசரி 100 எஸ்எம்எஸ், ரோலோவர் டேட்டாவாக 200ஜிபியும், 6 மாதத்திற்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், ஒரு வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா,விங்க் பிரீமியம் போன்ற பல நன்மைகள் கிடைக்கிறது.

அதேபோல் இது ரெகுலர் வாய்ஸ் சேவைகளுக்கு மத்தியில் 2 இலவச ஆட் ஆன் திட்டங்களையும் வழங்குகின்றதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

Samsung Galaxy F13: இப்படியொரு சாம்சங் போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?Samsung Galaxy F13: இப்படியொரு சாம்சங் போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?

 எந்த திட்டத்தை தேர்வு செய்யலாம்?

எந்த திட்டத்தை தேர்வு செய்யலாம்?

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199 திட்டத்தை தேர்வு
செய்தால் சற்று கூடுதலான டேட்டா கிடைக்கும் அவ்வளவு தான். மற்றபடி ரோலோவர் டேட்டா, அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்,ஹாட்ஸ்டார் சந்தா போன்ற நன்மைகளை இரண்டு திட்டங்களுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.. எனவே இந்த ரூ.999 போஸ்ட் பெய்டு திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

குறிப்பாக இப்போது ரூ.1199 போஸ்ட் பெய்டு திட்டத்தில் கிடைத்த நன்மைகள் முன்பு ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏர்டெல் போஸ்ட் பெய்டு திட்டமே வேண்டாம் என நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கவே இருக்கு சில
அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள். அதாவது இப்போது சில ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிட்டி 28 நாட்கள் ஆகும்.மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா, விங்க் மியூசிக்பிரீமியம் போன்ற பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

108mp Vs 12mp: ஆண்ட்ராய்டு கேமராவை விட ஐபோன் கேமரா ஏன் சிறந்தது?- கேமராவில் இதை கவனிப்பது மிக அவசியம்!108mp Vs 12mp: ஆண்ட்ராய்டு கேமராவை விட ஐபோன் கேமரா ஏன் சிறந்தது?- கேமராவில் இதை கவனிப்பது மிக அவசியம்!

 ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல்வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர அப்பல்லோ 24|7 சர்க்கிள்,இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

இன்றுமுதல் ஆப்பிள் மேக்புக் ப்ரோ 13 முன்பதிவு: சமீபத்திய எம்2 சிப்செட் ஆதரவு பாஸ்- விலை என்ன தெரியுமா?இன்றுமுதல் ஆப்பிள் மேக்புக் ப்ரோ 13 முன்பதிவு: சமீபத்திய எம்2 சிப்செட் ஆதரவு பாஸ்- விலை என்ன தெரியுமா?

 ஏர்டெல் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 6ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ.100 கேஷ்பேக் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் இதுபோன்ற ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel Rs.1199 plan VS Rs.999 plan: Which plan is better: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X