ஏறி அடித்த ஏர்டெல்.. வெறும் ரூ.1099 போதும்.. DTH கனெக்சன்.. OTT சந்தா.. FIBER டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!
ஏர்டெல் கஸ்டமர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி ரூ.998 மதிப்பிலான ஏர்டெல் பிளாக் திட்டத்தில் (Airtel Black Plan) ஃபைபர், லேண்ட்லைன், ஓடிடி சலுகைகளும், ரூ.1099 மதிப்பிலான திட்டத்தில் ஃபைபர், லேண்ட்லைன், ஓடிடி சலுகைகள் மட்டுமல்லாமல், டிடிஎச் சலுகையும் வழங்கப்படுகிறது. விவரம் இதோ.
ஏர்டெல் ரூ 998 திட்ட விவரங்கள் (Airtel Rs 998 Plan Details): இதுவொரு ஏர்டெல் பிளாக் (Airtel Black) திட்டமாகும். இந்த திட்டத்தில் ஃபைபர் (FIBER), லேண்ட்லைன் (LANDLINE), ஓடிடி (OTT) சலுகை மட்டுமல்லாமல், சிம் ஆட்-ஆன் (SIM Add-on) சலுகையும் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, ஃபைபர் கனெக்சன் மூலமாக 40 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டோட்டா (Unlimited Data) சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல லேண்ட்லன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Call) சலுகை வழங்கப்படுகிறது. இதுபோக 2 சிம் கார்டுகளுக்கு 105ஜிபி டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த சலுகைள் போக அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பீரிமியம் (Airtel Xstream Premium) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாவை பெற்று கொள்ளலாம். இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பீரிமியம் சந்தாவில் 12 ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.
சோனிலிவ் (SonyLiv), ஈராஸ்நவ் (ErosNow), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), லையன்ஸ்கேட்பிளே (LionsgatePlay), ஷீமரூமி (Shemaroome), டிவோ (Divo), நம்மபிளிக்ஸ் (Nammaflix), ஹங்கமா பிளே (HungamaPlay), அல்ட்ரா (Ultra), க்ளிக் (Klikk) ஆகியவ ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது.
30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெற வேண்டுமானால், ஜிஎஸ்டியோடு திட்டத்துக்கான தொகையை செலுத்த வேண்டும். அதோடு ரூ.3300 அட்வான்ஸ் செலுத்த வேண்டும். இதை செலுத்திய பிறகு உங்களுக்கு லேண்ட்லைன், ஃபைபர் கனெக்சன் வழங்கப்படும். இந்த ரூ.3300 தொகையானது, உங்களின் அடுத்த பில்லில் கழிக்கப்படும்.
ஏர்டெல் ரூ 1099 திட்ட விவரங்கள் (Airtel Rs 1099 Plan Details): இந்த ஏர்டெல் பிளாக் திட்டத்தில் ஃபைபர், லேண்ட்லைன், ஓடிடி சலுகை மட்டுமல்லாமல், டிடிஎச் (DTH) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கிறது.
அதோடு லேண்ட்லைன் கனெக்சன் மூலமாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி வாய்ஸ் கால் (STD Voice Call) சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகள் போக டிடிஎச் கனெக்சன் மூலம் ரூ.350 மதிப்புள்ள லைவ் டிவி சேனல்கள் சலுகையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
முந்தைய திட்டத்தை போலவே அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பீரிமியம் ஆகிய ஓடிடி தங்களின் சந்தா கிடைக்கிறது. அதேபோல சோனிலிவ், லையன்ஸ்கேட்பிளே, ஈராஸ்நவ், மனோரமா மேக்ஸ், ஷீமரூமி, நம்மபிளிக்ஸ், டிவோ போன்றவற்றின் சந்தா கிடைக்கிறது.
மேலும், அல்ட்ரா, க்ளிக் மற்றும் ஹங்கமா பிளே ஆப்களையும் பயன்படுத்தலாம். இந்த திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த ஏர்டெல் பிளாக் திட்டத்தையும் பெற வேண்டுமானால், ஜிஎஸ்டி + திட்டத்தின் விலை + ரூ.3300 தொகையை கட்ட வேண்டும். அதன்பின் சேவைகள் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications