3 மாதங்களுக்கு ஒரே ஏர்டெல் ரீசார்ஜ்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எஸ்எம்எஸ்.. எந்த திட்டம்?
ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யப் பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் தினசரி 3ஜிபி டேட்டா உடன் 84 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1099 Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) போன்ற சலுகைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை.
குறிப்பாக அதிக டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது. அதேசமயம் ஓடிடி சந்தா, 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினசரி டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. இப்போது இந்த திட்டத்தின் நன்மைகளையும் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1199 prepaid plan) 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. நீங்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதேபோல் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (amazon prime lite subscription) வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே போன்ற 18-க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தா கிடைக்கிறது. ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) சந்தா இதில் கிடைக்கும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
