Home
News

பொசுக்குன்னு போட்ட ஏர்டெல்.. 350+ டிவி சேனல்.. 20+ ஓடிடி சந்தா.. 200 எம்பிபிஎஸ் டேட்டா.. ஒரே பிளானில் எல்லாம்!

200 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகையை எதிர்பார்க்கு ஏர்டெல் (Airtel) கஸ்டமர்களுக்கு டேட்டா மட்டுமல்லாமல், 350+ டிவி சேனல்கள் மற்றும் 20+ ஓடிடி (OTT) சந்தாவையும் கொடுக்கும்படி 2 திட்டங்கள் கிடைக்கின்றன. அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் லைவ் எச்டி டிவி சேனல்கள் போன்ற சலுகையுடன் எண்டர்டெயின்மெண்ட் பிரியர்களை தட்டித்தூக்கும்படி இந்த திட்டங்கள் இருக்கின்றன. இவற்றின் விலை, முழு சலுகைகள், வை-பை ரூட்டர், செட்-டாப் பாக்ஸ் குறித்த அனைத்து விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஏர்டெல் ரூ 999 திட்ட விவரங்கள் (Airtel Rs 999 Plan Details): இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கொடுக்கப்படும். அதிகபட்சமாக 3300 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) ஓடிடி ஆப்கள் மற்றும் முன்னணி ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது.

பொசுக்குன்னு போட்ட ஏர்டெல்.. 350+ டிவி சேனல்.. 20+ ஓடிடி சந்தா பிளான்!

ஆகவே, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ( Disney+ Hotstar) மற்றும் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கிடைக்கிறது. மேலும், சோனிலிவ் (SonyLIV), ஃபேன் கோட் (Fan Code), ஈராஸ் நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ராஜ் டிஜிட்டல் டிவி (Raj Digital TV), ஷார்ட்ஸ் டிவி (Shorts TV), நம்ம ஃபிளிக்ஸ் (Namma Flix) ஆப்களின் சந்தா வருகிறது.

கூடுதலாக, மனோரமா மேக்ஸ் (Manorama Max), எபிக் ஆன் (Epic On), கிளிக் (Klikk), ஹங்கமா (Hungama), சோஷியல் ஸ்வாக் (Social Swag), டாகுபே (Docubay), ஹோய்சோய் (HoiChoi), சாவ்பால் (Chaupal), கான்ச்சா லங்கா (Kanccha Lanka), டிவோ (DIVO), டாலிவுட்பிளே (Dollywood Play), அல்ட்ரா (Ultra) மற்றும் ஷீமாரூமீ (Shemaroome) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாவும் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 1099 திட்ட விவரங்கள் (Airtel Rs 1099 Plan Details): பிராட்பேண்ட் டேட்டா, ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், கூடுதலாக டிவி சேனல்கள் (TV Channels) சலுகையும் வேண்டுமானால், இந்த திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம். இந்த பிராட்பேண்ட் திட்டத்திலும் 200 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கிடைக்கிறது.

முந்தைய திட்டத்தை போலவே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ சந்தா வருகிறது. அதேபோல சோனிலிவ், ஃபேன் கோட், ஈராஸ் நவ், லயன்ஸ்கேட் பிளே, ராஜ் டிஜிட்டல் டிவி, ஷார்ட்ஸ் டிவி, நம்ம ஃபிளிக்ஸ், மனோரமா மேக்ஸ், எபிக் ஆன், கிளிக், ஹங்கமா மற்றும் சோஷியல் ஸ்வாக் ஆப்களின் சந்தாவை பயன்படுத்தலாம்.

மேலும், டாகுபே, ஹோய்சோய், சாவ்பால், கான்ச்சா லங்கா, டிவோ, டாலிவுட்பிளே, அல்ட்ரா மற்றும் ஷீமாரூமீ ஆப்களின் சலுகையும் கிடைக்கிறது. இந்த சலுகைகளுக்கு பிறகு ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ் மூலம் (Smart Set-Top Box) மூலம் 350+ டிவி சேனல்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இதில் எச்டி சேனல்களும் அடங்கும்.

ஆகவே, டேட்டா மற்றும் ஓடிடி மட்டும் போதுமானால், முதல் திட்டத்தை தேர்ந்தெடுங்கள் அல்லது டேட்டா, ஓடிடி மற்றும் டிவி சேனல்கள் வேண்டுமானால் இரண்டாவது திட்டத்தை தேர்ந்தெடுங்கள். இந்த திட்டங்களுக்கு ரூ.100 மட்டுமே வித்தியாசமாக இருக்கிறது. குறைந்தது 3 மாதங்களுக்காக அட்வான்ஸ் தொகையை செலுத்தினால் மட்டுமே சேவை வழங்கப்படும்.

இது முதல் முறை சேவையை பெறும் கஸ்டமர்களுக்கு வை-பை ரூட்டர், செட்-டாப் பாக்ஸ் வழங்குவதற்காக பெறப்படுகிறது. ஆனால், ஏற்கனவே சேவையை பெற்றுவந்தால், அந்த திட்டத்துக்கான தொகையை செலுத்தினாலேயே போதும் சேவை வழங்கப்படும். அட்வான்ஸ் தொகையை கொடுக்கும் பட்சத்தில் வை-பை ரூட்டர், செட்-டாப் பாக்ஸ் இலவசமாக கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1099 Plan With 200Mbps Speed Data 350 TV Channels 20 OTT Subscription Here Broadband Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X