Home
News

ஏர்டெல் போடு.. ரூ.1099 போதும்.. 350 டிவி சேனல்.. 300 எம்பிபிஎஸ் வேகம்.. 3 ஓடிடி சந்தா.. வேலிடிட்டி எவ்வளவு?

மொபைல், லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு அன்லிமிடெட் இன்டர்நெட், டிவிக்கு 350 லைவ் சேனல்கள் மற்றும் முன்னணி ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் மட்டுமல்லாமல், லேண்ட்லைன் வாய்ஸ் கால் கனெக்சனையும் கொடுக்கும் ஏர்டெல் பிளாக் (Airtel Black) திட்டத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ஏர்டெல் ரூ 1099 திட்ட விவரங்கள் (Airtel Rs 1099 Plan Details): இதுவொரு ஏர்டெல் பிளாக் (Airtel Black) திட்டமாகும். இந்த திட்டத்தில் ஃபைபர் (FIBER), லேண்ட்லைன் (LANDLINE) மற்றும் டிவி சேனல் (TV Channel) சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி (OTT) சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, மொபைல், டிவி, லேப்டாப் போன்ற அனைத்துக்கும் இன்டர்நெட் சேவை மட்டுமல்லாமல், ஓடிடி மற்றும் டிவி சலுகைகளும் கிடைக்கிறது.

ஏர்டெல் போடு.. ரூ.1099 போதும்.. 350 டிவி சேனல்.. 300 எம்பிபிஎஸ் வேகம்!

இந்த திட்டத்தின் மூலம், உங்களுக்கு 200 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட் சேவை கொடுக்கப்படும். இதன் மூலம் மூன்றுக்கும் மேற்பட்ட டிவைஸ்களை கனெக்ட் செய்து இன்டர்நெட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதற்கு லேண்ட்லைன் கனெக்சன் இருக்க வேண்டும். அதேபோல ரூ.350 மதிப்புள்ள லைவ் டிவி சேனல்கள் சலுகையும் கொடுக்கப்படுகிறது.

இந்த சலுகைகள் போக உங்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பீரிமியம் (Airtel Xstream Premium) ஆகிய ஓடிடி தங்களின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. இதில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பீரிமியம் சப்ஸ்கிரிப்ஷனில் கூடுதலாக 12 ஓடிடி ஆப்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆகவே, சோனிலிவ் (SonyLiv), லையன்ஸ்கேட்பிளே (LionsgatePlay), ஈராஸ்நவ் (ErosNow), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), ஷீமரூமி (Shemaroome), நம்மபிளிக்ஸ் (Nammaflix) டிவோ (Divo), அல்ட்ரா (Ultra), க்ளிக் (Klikk) மற்றும் ஹங்கமா பிளே (HungamaPlay) உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

ஏர்டெல் போடு.. ரூ.1099 போதும்.. 350 டிவி சேனல்.. 300 எம்பிபிஎஸ் வேகம்!

இதன் சலுகைகளை பெற ஜிஎஸ்டியோடு திட்டத்துக்கான தொகையை கட்ட வேண்டும். ஒருவேளை உங்களுக்கு நெட்பிளிக்ஸ் மற்றும் கூடுதல் இன்டர்நெட் வேகம் வேண்டுமானால், ரூ 1599 விலையில் மற்றொரு ஏர்டெல் பிளாக் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதைப்பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

ஏர்டெல் ரூ 1599 திட்ட விவரங்கள் (Airtel Rs 1599 Plan Details): இந்த திட்டத்தில் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் ஃபைபர், லேண்ட்லைன் மற்றும் டிவி சேனல் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. அதோடு முக்கிய ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது.

இந்த ஃபைபர் இன்டர்நெட் மூலம், ஐந்துக்கும் மேற்பட்ட டிவைஸ்களை கனெக்ட் செய்துகொள்ள முடியும். அதேபோல லேண்ட்லைன் கனெக்சன் மூலம் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை செய்து கொள்ள முடியும். மேலும், முந்தைய திட்டத்தைப் போலவே ரூ.350 மதிப்பிலான லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ளலாம். இதற்காக செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படும் அதற்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டும்.

ஏர்டெல் போடு.. ரூ.1099 போதும்.. 350 டிவி சேனல்.. 300 எம்பிபிஎஸ் வேகம்!

இந்த திட்டத்தின் ஓடிடி சலுகைகளை பொறுத்தவரையில், அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் சலுகைகள் கிடைக்கிறது. இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பீரிமியம் சப்ஸ்கிரிப்ஷனில் ஈராஸ்நவ், சோனிலிவ் உள்ளிட்ட 12 ஆப்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த திட்டத்துக்கும் 30 நாட்கள் வேலிடிட்டடி வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs 1099 Plan With 200 Mbps Speed Unlimited Data, TV Chennels Voice Calls, OTT Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X