Home
News

Airtel சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? அமேசான் பிரைம்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. இந்த திட்டங்களை விட்றாதீங்க..

ஏர்டெல் (Airtel) நிறுவனம் அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1029 மற்றும் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1029 Prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். ஆகவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த ஏர்டெல் ரூ.1029 திட்டமும் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும்.

Airtel சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? அமேசான் பிரைம்..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் போன்ற நன்மைகள் ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

குறிப்பாக அதிக நாட்கள் வேலிடிட்டி, ஓடிடி சந்தா, வாய்ஸ் கால்கள் நன்மையை எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. ஒருவேளை அமேசான் பிரைம் சந்தா எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் 1199 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. இப்போது ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1199 prepaid plan) 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. நீங்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (amazon prime lite subscription) வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

Airtel சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? அமேசான் பிரைம்..

இந்த ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே போன்ற 20-க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தா கிடைக்கிறது. ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) சந்தா இதில் கிடைக்கும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், rewards mini subscription, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Rs.1029 and Rs.1199 prepaid plans Validity and benefits: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X