சத்தமின்றி Airtel கொண்டுவந்த இரண்டு புதிய திட்டங்கள்.. OTT.. டேட்டா.. 90 நாள் வேலிடிட்டி.. என்ன விலை?
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதாவது ஏர்டெல் (airtel) நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் இணைந்து ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவையை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்த உள்ளது. விரைவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை இந்தியாவில் கிடைக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் சத்தமின்றி இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. அதாவது ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.195 மற்றும் ரூ.100 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.100 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 100 plan) ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். அதேபோல் 5ஜிபி டேட்டா நன்மை இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டம் 30 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை (JioHotstar subscription)வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.195 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 195 plan) ஆனது 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இதுவும் ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். மேலும் 15ஜிபி டேட்டா நன்மை இந்த திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டம் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை (JioHotstar subscription)வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் கிடைக்காது
குறிப்பாக ஓடிடி நன்மையை எதிர்பார்க்கும் பயனர்கள் மட்டும் இந்த ஏர்டெல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. ஒருவேளை அழைப்பு நன்மைகள், டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை எதிர்பார்க்கும் பயனர்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.599 மற்றும் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யலாம். இப்போது இந்த திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 549 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். நீங்கள் ஏர்டெல் ரூ.549 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் வழங்குகிறது ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 3999 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. எனவே ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் ஒரு வருடத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா வழங்குகிறது இந்த திட்டம்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. அதேபோல் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data), தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.


Click it and Unblock the Notifications








