பெங்களுரைத் தொடர்ந்து புனேயில் ஏர்டெல்லின் 4ஜி எல்டிஇ சேவை

Posted By: Karthikeyan
பெங்களுரைத் தொடர்ந்து புனேயில் ஏர்டெல்லின் 4ஜி எல்டிஇ சேவை

ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி எல்டிஇ சேவையை புனேவில் இன்று அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் முதன் முறையாக இந்த 4ஜி எல்டிஇ சேவையை ஏர்டெல் வழங்குகிறது.

இதற்கு முன்பு பெங்களுர் மற்றும் கொல்கத்தா போன்ற மாநகரங்களில் இந்த சேவையை அறிமுகம் செய்தது. அதோடு இந்த வார தொடக்கத்தில் ஹூவேய் நிறுவனத்தோடு இணைந்து ஒரு எல்டிஇ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது ஏர்டெல்.

புனேயில் இந்த 4ஜி எல்டிஇ சேவையை அறிமுகம் செய்து வைத்ததன் மூலம் புனே வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான வசதிகளை வழங்க இருக்கிறது. இந்த சேவையில் ப்ரேக் ப்ரீ, ப்ரேக் ப்ரீ மேக்ஸ், ப்ரேக் ப்ரீ அல்ட்ரா மற்றும் ப்ரேக் ப்ரீ அல்டிமேட் என்று 4 திட்டங்கள் உள்ளன.

இந்த திட்டங்கள் ரூ.999லிருந்து தொடங்குகின்றன. மேலும் ஸ்மார்ட் பைட்ஸ் ப்ரோக்ராம் என்ற புதிய திட்டத்தையும் இந்த 4ஜி சேவையில் வழங்குகிறது ஏர்டெல்.

அதோடு ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் ப்ராட்பேண்ட் டிவி சேவையையும் வழங்குகிறது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 4ஜி எல்டிஇ நெட்வொர்க்கில் டிவி பார்க்கலாம். மேலும் 35 லைவ் டிவி சேனல்களையும், 5 வீடியோ டிமான்ட் சேனல்களையும் மற்றும் 7 முழு மூவிகளையும் ஏர்டெல் வழஙக்குகிறது. அதோடு டிவி சேனல்களை 76ஆக உயர்த்த இருக்கிறது. இதற்கு மாதம் ரூ.150 செலுத்தினால் போதுமானது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்