Home
News

1 ரூபாய் 98 பைசாவிற்கு 1ஜிபி; அடிபாதாளத்திற்கு இறங்கிய ஏர்டெல்; ஜியோவின் 3 மாத திட்டம் காலி.!

அதன் ஒரு பகுதியாக ஏர்டெல் நிறுவனம் மிகப்பெரிய மாற்றம் ஒன்றை சமீபத்தில் ஏற்படுத்தி இருந்தது.

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர், ஏர்டெல் பயனர்கள் நிறுவனத்தின் சேவையில் இருந்து விலகிக்கொள்ளும் நிலை உருவானதை அடுத்து, பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ஒட்டுமொத்த திட்டங்களின் நன்மைகளையும், விலைகளையும் ஜியோவிற்கு போட்டியிடும் வண்ணம் திருத்தி அமைத்தது.

ரூ.1.98/-க்கு 1ஜிபி; ஜியோவை விட அடிபாதாளத்திற்கு இறங்கிய ஏர்டெல்.!

அதன் ஒரு பகுதியாக ஏர்டெல் நிறுவனம் மிகப்பெரிய மாற்றம் ஒன்றை சமீபத்தில் ஏற்படுத்தி இருந்தது. அதாவது அதன் ப்ரீபெயிட் திட்டங்களின் டேட்டா நன்மை முடிந்த பின்னர் கிடைக்கும் வரம்பற்ற டேட்டாவின் வேகத்தை 128 Kbps என்று அதிகரித்துள்ளதாக அறிவித்தது.

சேவையை விட்டு வெளியேற்றுவதற்கு முன்னர்.!

சேவையை விட்டு வெளியேற்றுவதற்கு முன்னர்.!

இது ஜியோவுடனான போட்டியை இன்னும் அதிகரிக்கும் என்கிற பக்கத்தை தவிர்த்து, மறுபக்கத்தை பார்த்தால், இந்த நடவடிக்கையானது ஏர்டெல் நிறுவனத்திற்கு மிகவும் தேவையானதொரு மாற்றமாகவே இருந்தது. ஏனெனில் பல பயனர்கள் ஏர்டெல் சேவையை விட்டு வெளியேற்றுவதற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஜியோவின் 3 மாத கால திட்டம் காலி.!

ஜியோவின் 3 மாத கால திட்டம் காலி.!

அந்த பீதியிலேயே தான் இந்த நடவடிக்கை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது மறைமுகமான உண்மை. இந்த அதிரடி மாற்றத்தை தொடர்ந்து, ஏர்டெல் அதன் மிகவும் பிரபலமான ரூ.399/-ல் ஒரு நம்பமுடியாத திருத்தத்தை அறிவித்துள்ளது. இந்த திடுத்தமானது ஜியோவின் 3 மாத கால திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் பழக்கம் கொண்ட பயனர்களை ஏர்டெல் பக்கம் ஈர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஏனெனில் திருத்தப்பட்ட நண்மைகளானது ஜியோவின் டேட்டா நன்மையை விட அதிகமாகும்.

அறிமுகத்தின் போது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா.!

அறிமுகத்தின் போது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா.!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது ரூ.399/-ன் வழியாக ஜியோவை சரிக்கு சமமாக எதிர்த்து வந்தது. அறிமுகத்தின் போது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கிய இந்த திட்டம் சிறிது காலம் கழித்து நாள் ஒன்றிற்கு 1.4ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்கும்படி திருத்தி அமைக்கப்பட்டது.

இனி நாள் ஒன்றிற்கு 2.4 ஜிபி அளவிலான டேட்டா.!

இனி நாள் ஒன்றிற்கு 2.4 ஜிபி அளவிலான டேட்டா.!

தற்போது மீண்டும் திருத்தப்பட்டு இனி நாள் ஒன்றிற்கு 2.4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடன் இதன் செல்லுபடி காலமும் 70 நாட்களில் இருந்து 84 நாட்களாக திருத்தப்பட்டுள்ளது. ஆக திருத்தம் பெற்ற ரூ.399/-ன் கீழ் ஒரு பயனர் மொத்தம் 196.8 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை அனுபவிக்கலாம்.

ஏர்டெல் ரூ.399/-ன் இதர நன்மைகள்.!

ஏர்டெல் ரூ.399/-ன் இதர நன்மைகள்.!

இதர நன்மைகளை பொறுத்தவரை, ​​ஏர்டெல் ரூ.399/-ன் கீழ் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் மொத்தம் 84 நாட்களுக்கு அனுபவிக்கலாம். இந்த அதிரடி திருத்தத்தின் வழியாக, ஏர்டெல் நிறுவனம் அதன் 1ஜிபி அளவிலான டேட்டா விலையை ரூ.1.98/-க்கு கொண்டு வந்துவிட்டதால், ஜியோவின் ரூ.399/-க்கு கடும் பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோவின் ரூ.448/-ன் நன்மைகள்.!

ஜியோவின் ரூ.448/-ன் நன்மைகள்.!

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399/- திட்டமானது, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி தரவு, வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. உடன் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலும் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.499/-ன் நன்மைகள்.!

ஏர்டெல் ரூ.499/-ன் நன்மைகள்.!

முன்னதாக, ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.499/-ன் கீழ் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் திட்டமொன்றை அறிவித்தது. டேட்டாவுடன் சேர்த்து வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்புகளையும், நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்களையும் மொத்தம் 70 நாட்களுக்கு வழங்கும் இந்த திட்டமானது, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.448/- உடன் நேரடியாக மோதுகிறது.

ஜியோவின் ரூ.448/-ன் நன்மைகள்.!

ஜியோவின் ரூ.448/-ன் நன்மைகள்.!

ஜியோவின் ரூ.448/-ன் நன்மைகளை பொறுத்தவரை, நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் திட்டமொன்றை அறிவித்தது. டேட்டாவுடன் சேர்த்து வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி குரல் அழைப்புகளையும், நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்களையும் மொத்தம் 84 நாட்களுக்கு வழங்கும். உடன் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel revises Rs. 399 plan, now offers 2.4GB data per day for 84 days. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X