ஏர்டெல் அதிரடி: நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான 4ஜி டேட்டா; ஜியோவை ஓரங்கட்டியது.!
அதென்ன மாற்றங்கள்.? இனி இந்த திட்டங்கள் வழங்கும் நன்மைகள் என்ன.?
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் இந்தியா போன்ற மற்ற இயக்குனர்களுடன் போட்டியிடும் நோக்கில், பார்தி ஏர்டெல் நிறுவனம் தொடர்ச்சியான முறையில் புதிய ரீசார்ஜ் பொதிகளை அறிமுகம் செய்யும் மறுகையில், ஏற்கனவே சந்தையில் இருக்கு

அப்படியாக, பார்தி ஏர்டெல் தற்போது அதன் ரூ.349/- மற்றும் ரூ.549/- கட்டணத்திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதென்ன மாற்றங்கள்.? இனி இந்த திட்டங்கள் வழங்கும் நன்மைகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.!

மொத்தம் 56ஜிபி
ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ரூ.349/- என்ற ரீசார்ஜை செய்யும் பயனர், மொத்தம் 56ஜிபி அளவிலான 3ஜி / 4 ஜி டேட்டாவை பெறுவர். இதற்கு முன்னர் இந்த திட்டத்தின் கீழ் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் 1 ஜிபி / நாள் என்கிற கணக்கில் மொத்தம் 28 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கியது.

28 நாட்களுக்கு செல்லுபடியாகும்
கூடுதலாக இந்த ரூ.349/- திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர் வரம்பிடப்பட்ட உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், உள்வரும் ரோமிங் அழைப்புகள் ஆகிய நன்மைகளுடம் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் அனுபவிக்கலாம். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 84ஜிபி
மறுகையில் கிடைக்கும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.549/- என்கிற கட்டணத்திட்டமானது, இப்போது மொத்தம் 84ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி தரவை வழங்குகிறது. அதாவது இந்த திட்டம் இனி நாள் ஒன்றிற்கு மொத்தம் 3ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். முன்னர் இதே திட்டம் ஒரு நாளைக்கு 2.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

28 நாட்களுக்கு செல்லுபடியாகும்
கூடுதலாக இந்த ரூ.549/- திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர் வரம்பிடப்பட்ட உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள், உள்வரும் ரோமிங் அழைப்புகள் ஆகிய நன்மைகளுடம் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் அனுபவிக்கலாம். இந்த திட்டமும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாள் ஒன்றிற்கு 3.5ஜிபி
இந்த இரண்டு திட்டங்களையும் தவிர்த்து, ஏர்டெல் வழங்கும் மற்றொரு காம்போ திட்டமான ரூ.799/- ஆனது வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் வெளிச்செல்லும் ரோமிங் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உட்பட நாள் ஒன்றிற்கு 3.5ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்குகிறதென்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








