Airtel கஸ்டமர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. இனி 3 மடங்கு அதிக டேட்டா.. பிரபல திட்டத்தின் நன்மையில் திடீர் மாற்றம்!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு பிரபலமான திட்டத்தின் நன்மைகள் திடீரென மாற்றப்பட்டுள்ளது. அதென்ன திட்டம்? அதன் விலை என்ன? முன்னதாக இந்த திட்டத்தின்கீழ் என்ன நன்மை கிடைத்தது? தற்போது அதில் என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது?இதோ விவரங்கள்:
பார்தி ஏர்டெல், ரூ.49 மதிப்புள்ள தனது டேட்டா பேக் (Data Pack) திட்டத்தின் நன்மைகளை திருத்தியுள்ளது. தற்போது இந்த திட்டம் முன்பை விட 3 மடங்கு அதிக டேட்டாவை வழங்குகிறது. முன்னதாக ஏர்டெல் ரூ.49 டேட்டா பேக் ஆனது 1 நாள் வேலிடிட்டியின் கீழ் 6ஜிபி அளவிலான ஹை-ஸ்பீட் டேட்டாவை வழங்கியது.

தற்போது ரூ.49 டேட்டா பேக்கின் கீழ் 20ஜிபி அளவிலான எஃப்யுபி (FUP - Fair Usage Policy) டேட்டா கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இந்த திட்டத்தின் கீழ் 64கேபிபிஎஸ் என்கிற அளவிலான இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும்.
ரூ.49 டேட்டா பேக் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இந்த திருத்தத்துடன், ஏர்டெல் இப்போது அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் இரண்டு டேட்டா பேக்குகளை தன்வசம் கொண்டுள்ளது: 2 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரூ.99 டேட்டா பேக் மற்றும் 1 நாள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் ரூ.49 டேட்டா பேக்.

ரூ.99 டேட்டா பேக்கின் நன்மைகளை பொறுத்தவரை, இது ஒரு நாளைக்கு 20ஜிபி டேட்டாவை 2 நாட்களுக்கு வழங்குகிறது. அதாவது இதன் கீழ் மொத்தம் 40ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் ரூ.49-ஐ போலவே (ஒரு நாளுக்கான) குறிப்பிட்ட டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
ஜியோவிடம் உள்ள டேட்டா பூஸ்டர் பிளான்களின் விலை விவரங்கள்: ஏர்டெல் நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான ஜியோ நிறுவனத்திடம் 7 வகையான டேட்டா பூஸ்டர்கள் உள்ளன: ரூ.15,ரூ.19, ரூ.25,ரூ.29, ரூ.61, ரூ.121 மற்றும் ரூ.222 பிளான்கள். அனைத்து 7 திட்டங்களுமே வெவ்வேறு டேட்டா நன்மைகளை வழங்குகின்றன; ஆனால் வேலிடிட்டியை பொறுத்தவரை உங்களுடைய ஆக்டிவ் பிளானுடன் ஒற்றுப்போகும்.

அதாவது மேற்கண்ட 7 திட்டங்களுக்கும் சொந்தமாக எந்த வேலிடிட்டியும் கிடையாது. மாறாக அவைகள் உங்களுடைய மெயின் ரீசார்ஜ் எத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகுமே, அத்தனை நாட்களுக்கு செல்லுபடியாகும். அந்த காலகட்டத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் டேட்டா பூஸ்டரின்கீழ் கிடைத்த டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஜியோவின் ரூ.15 பேக் ஆனது 1ஜிபி டேட்டாவையும், ரூ.19 பேக் ஆனது 1.5ஜிபி டேட்டாவையும், ரூ.25 பேக் ஆனது 2ஜிபி டேட்டாவையும், ரூ.29 பேக் ஆனது 2.5ஜிபி டேட்டாவையும், ரூ.61 பேக் ஆனது 6ஜிபி டேட்டாவையும், ரூ.121 பேக் ஆனது 12ஜிபி டேட்டாவையும் மற்றும் ரூ.222 பேக் ஆனது 50ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது.
ரூ.49 மீதான ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அதிரடி திருத்தம் 1ஜிபி டேட்டாவின் பயனுள்ள விலையை ரூ.2.45 க்கு கொண்டு வந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் அதன் டேட்டா பேக்குகளில் மாற்றங்களை கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை வழங்கவும், முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ போன்ற நிறுவனங்களுடன் போட்டித்தன்மையுடன் இருக்கவே இதை செய்துள்ளது என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இதுபோன்ற நடவடிக்கைகள் ஏர்டெல் நிறுவனத்தின் ஏஆர்பியு (ARPU) எனப்படும் ஒரு பயனருக்கு சராசரி வருவாயை (Average revenue per user) அதிகரிக்கும். நினைவூட்டும் வண்ணம் பார்தி ஏர்டெல்லின் ஆவரேஜ் ரெவின்யூ பெர் யூசர் ஆனது, தற்போது இந்திய டெலிகாம் சந்தையிலேயே அதிகபட்சமாக உள்ளது. அது ரூ.208 ஆகும்.


Click it and Unblock the Notifications