Airtel இந்த திட்டத்தில் 10மடங்கு கூடுதல் நன்மை அறிவிப்பு.! எந்த திட்டம் தெரியுமா?
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கி வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்வதில்லை, ஆனால் ஜியோ நிறுவனம் தொடர்ந்து கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்கிறது.

மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்தியாவில் மிகவும் பிரபலமான ழுவுவு தளங்களில் ஒன்றாகும். குறிப்பாக இது பல இந்தியமொழிகளில் பலவிதமான நிகழ்ச்சிகளை வழங்குவதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இலவசமாக வழங்குகின்றன. ஆனாலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மையை வழங்கும் ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டங்களை விட ஜியோ ஒப்பீட்டளவில் அதிக திட்டங்களை வழங்குகிறது என்பது மிகவும் வெளிப்படை. இருந்தபோதிலும் ஏர்டெல் திட்டங்களையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

எடுத்துக்காட்டாக ஏர்டெல் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த புதிய ப்ரீபெய்ட் திட்டமாக ரூ.401 பிளானை, ஏனெனில்இது வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஜபி சந்தாவின் ஒரு வருட சந்தாவை இலவசமாக வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் இந்த திட்டத்தின் நன்மைகளை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. அதுவும் முன்பை விட சுமார் 10மடங்கு அதிக டேட்டாவுடன்.

ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்தபோது, அழைப்பு, எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் இல்லாமல் வந்தது,இது டேட்டா நன்மை மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஜபியின் இலவச சந்தாவை ஒரு வருடத்திற்கு மட்டுமே வழங்கியது.இந்த திட்டம் 3ஜிபி அளவிலான டேட்டாவுடன் மட்டுமே வந்தது.

ஆனால் இது டேட்டாவை முதன்முறையாக பார்க்கும் ஒருவருக்கு சரியான திட்டமாக அமையவில்லை, சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி திட்டத்திற்கு ஆண்டு சந்தா (ரூ.399) செலுத்துவதைப் போன்றது தான்.

தற்சமயம் ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.401 டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி திட்டத்தை புதுப்பித்துள்ளது, அதன்படி இப்போது இந்த திட்டத்தின் கீழ் முன்பை விட 10மடங்கு அதிக டேட்டா அணுக கிடைக்கிறது, அதாவது 30ஜிபி அளவிலான டேட்டாவை
வழங்குகிறது.

மேலும் இந்த கூடுதல் நன்மையால் ரூ.401 திட்டம் செலவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்று கேட்டால் கிடையாது என்றுதான்கூறவேண்டும். இது அதே ரூ.401 விலையின் கீழ்தான் இன்னமும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது மற்றும் இவற்றின் செல்லுபடியாகும்அதே 28நாட்கள் தான் ஆகும் என்பது குறிபிடத்தக்கது.


Click it and Unblock the Notifications