Home
News

ஏர்டெல் ரூ.200 ப்ரீபெய்ட் திட்டத்தில் சத்தமின்றி கூடுதல் சலுகை அறிவிப்பு.. அமேசான் பிரைம் வீடியோ.. வேலிடிட்டி?

ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இந்நிறுவனம் கொண்டுவந்த ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.200 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் நன்மைகளை வழங்கி உள்ளது.

அதாவது ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.200 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை பாக்ஸ் ஆபிஸ் பேக் (Box Office Pack) எனப் பெயர் மாற்றம் செய்து,கூடுதல் ஓடிடி நன்மைகளை வழங்கி உள்ளது. இப்போது இந்த ஏர்டெல் ரூ.200 திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.200 ப்ரீபெய்ட் திட்டத்தில்  கூடுதல் சலுகை அறிவிப்பு..

ஏர்டெல் ரூ.200 திட்டம் (Airtel Rs 200 Pack) ஆனது தற்போது புதிதாக அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் மற்றும் ZEE5 பிரீமியம் சந்தாக்களையும் சேர்த்துள்ளது. இதன் மூலம் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மேலும் ஒரு விரிவான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

அதேபோல் ஏர்டெல் ரூ.200 திட்டம் மூலம் ஜியோஹாட்ஸ்டார் சந்தா 28 நாட்களுக்கு கிடைக்கும். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 18க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.

குறிப்பாக ஏர்டெல் ரூ.200 திட்டம் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி சந்தா திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம். ஜியோ நிறுவனமும் இதேபோன்று ஒரு திட்டத்தை வைத்துள்ளது. அந்த திட்டத்தின் நன்மைகளையும் இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ.200 திட்டம் (Jio Rs 200 Plan) ஆனது 1000+ லைவ் டிவி சேனல்களை தருகிறது. அதாவது இதில் பிரீமியம் சேனல்கள் உடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ் (Warner Bros), டிஸ்கவரி ( Discovery), ஈடிவி (ETV) போன்ற பல சேனல்கள் கிடைக்கின்றன.

இந்த சேனல்களை ஜியோஸ்டார் (JioStar) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆகிய ஆப்களில் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த லைவ் சேனல்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஏர்டெல் ரூ.200 ப்ரீபெய்ட் திட்டத்தில்  கூடுதல் சலுகை அறிவிப்பு..

யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு (Amazon Prime Video Mobile Edition), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) போன்ற 15 ஓடிடி சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோவின் ரூ.200 திட்டம் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம்.

photo credits: airtel, telecomtalk

Best Mobiles in India

English summary
Airtel Revamps Rs 200 Recharge Plan with New Box Office and OTT Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X