Home
News

இரவோடு இரவாக மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கிய Airtel.. எந்த திட்டம்?

ஏர்டெல் (airtel) நிறுவனம் கடந்த சில மாதங்களில் பட்ஜெட் விலையில் ஓடிடி நன்மைகளைத் தரும் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம். இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது சமீபத்தில் ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கியது. இதேபோன்று ஏர்டெல் நிறுவனமும் தற்போது ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த வருமானம் கொண்ட பயனர்கள் பெரும்பாலும் இந்த ரீசார்ஜ் திட்டங்களில் தான் அதிகம் செய்கின்றனர். ஆனால் தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களை நிறுத்தியுள்ளன.

இரவோடு இரவாக மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கிய Airtel..

ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (airtel Rs 249 prepaid plan) ஆனது தினமும் 1ஜிபி டேட்டா நன்மையை வழங்கியது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். எனவே இந்த ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 24ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைத்தன.

அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்கியது ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்.மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே, பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைத்தன.

அதேபோல் ஜியோ ரூ 249 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 249 prepaid plan) ஆனது தினமும் 1 ஜிபி டேட்டாவை வழங்கியது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா கிடைத்தது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்கியது ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (Jio TV), ஜியோ கிளவுட் (Jio Cloud) உள்ளிட்ட பல சிறப்பான நன்மைகளை வழங்கியது ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடிந்தது. தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இந்த மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியுள்ளதால் பயனர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் ஏர்டெல் சமீபத்தில் அறிமுகம் செய்த ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 399 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. எனவே ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் 28 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் (Jio Hotstar Mobile subscription) இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

தினமும் 100 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel removes Rs 249 prepaid plan like Jio: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X