சத்தமில்லாமல் அட்டகாச திட்டத்தை நீக்கிய ஏர்டெல்.! என்ன திட்டம் தெரியுமா?

|

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, குறிப்பாக அன்மையில் இந்நிறுவனம் வழங்கிய சலுகைகள் பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

ரூ.2398 பிரீபெய்ட் திட்டம்

இந்நிலையில் ஏர்டெல் தொலைதொடர்பு ஆபரேட்டரின் வலைத்தளம் மற்றும் ஏர்டெல் நன்றி பயன்பாட்டிலிருந்து ரூ.2398 பிரீபெய்ட் திட்டம் அகற்றப்பட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில் இலவச டேட்டாவை வழங்கும் கூப்பன்களை அறிவித்துள்ள நிலையில், அதன் ரூ.2398 நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டத்தை நீக்கியுள்ளது.

அடிப்படையில் ஏர்டெல்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஏர்டெல் வலைத்தளத்திலும் பிற மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் தளங்களிலும் 2,398 பிரீபெய்ட் திட்டம் கிடைக்காது எனவும். பின்பு இந்த திட்டம் நாள் ஒன்றுக்கு 1.5 GB டேட்டாவை வழங்கியது. மேலும், இது 365 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனம் அதன்

தற்சமயம் ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 6 ஜிபி வரை டேட்டா வழங்கும்படியான இலவச கூப்பன்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கூப்பன்களானது ரூ.219 திட்டத்துக்கு மேல் ரீசார்ஜ் செய்யும்போது கிடைக்கிறது. இந்த திட்டங்களானது குறிப்பிட்ட முறையில் ரீசார்ஜ் செய்யும்போதே கிடைக்கிறது.

ஆரம்பம்தான்: தலைநகர் சென்னையில் ஆப்பிள் உற்பத்தி தொடக்கம்- ஐபோன் விலை குறையுமா?ஆரம்பம்தான்: தலைநகர் சென்னையில் ஆப்பிள் உற்பத்தி தொடக்கம்- ஐபோன் விலை குறையுமா?

 செய்யும்போது பயனர்கள்

ஏர்டெல் அறிவித்துள்ள இலவச கூப்பன்கள் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும்போது பயனர்கள் ஒவ்வொரு வகையான திட்டத்திற்கு ஏற்ப கூப்பன்களை பெறுகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. அதோடு மைஏர்டெல் பயன்பாட்டின்மூலம் மை கூப்பன் பிரிவை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும்போது மட்டுமே சலுகைகள் வழங்கப்படுகிறது.

 இலவச கூப்பன்கள் குறித்து

ஏர்டெல் வழங்கும் இலவச கூப்பன்கள் குறித்து விரிவாக பார்க்கையில், ரூ.219, ரூ.249, ரூ.279, ரூ.349, ரூ.398 ஆகிய திட்டத்தை மை கூப்பன் பிரிவின் கீழ் ரீசார்ஜ் செய்தால் 1 ஜிபி-க்கான இரண்டு கூப்பன்கள் பெறலாம்.

ரூ.399, ரூ.449 மற்றும் ரூ.558 ஆகிய திட்டங்களில்

அதேபோல் பயனர்கள் ரூ.399, ரூ.449 மற்றும் ரூ.558 ஆகிய திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும்போது 1 ஜிபி டேட்டாவுக்கு உண்டான நான்கு வவுச்சர்கள் பெறுவார்கள். குறிப்பாக ரூ.598 மற்றும் ரூ.698 திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும்போது 1 ஜிபி டேட்டா வழங்கும் ஆறு கூப்பன்களை 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் வழங்குகிறார்கள்.

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை

இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் மார்ச் மாத தொலைத் தொடர்பு சந்தா தரவின் அறிக்கை வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 2020 இல் சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களைச் சேர்த்த பாரதி ஏர்டெல் நிறுவனம், மார்ச் மாதக் கணக்கின் படி சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களை இழந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏர்டெலுக்கு என அசைக்கமுடியாத வாடிக்கையாளர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அதன் பிரதான காரணம் ஏர்டெல் வழங்கும் அதிவேக டேட்டாவும் ஒன்று. ஜியோ அறிமுகத்திற்கு முன்பு
ஏர்டெல் ஒளிபரப்பு செய்யும் விளம்பரமானது அதன் அதிவேக டேட்டாவுக்கு இணையான வேகத்தை யாரும் வழங்கவில்லை என்பதாகும்.

Best Mobiles in India

English summary
Airtel Removes Rs 2398 Long-Term Plan: Check Details Here: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X