Home
News

சத்தமின்றி குறைந்த விலை திட்டங்களை நீக்கிய ஏர்டெல்.. இனி ஆரம்பமே ரூ.349 தான்.. இதோ பட்டியல்..

ஏர்டெல் நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் கிடைக்கும் பல ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் விலை உயர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது தினமும் 1ஜிபி மற்றும் 1.5ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இப்போது இது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

அதாவது ரூ.299, ரூ.319, ரூ.579, ரூ.619 ரூ.649 ரூ.799 மற்றும் ரூ.929 ப்ரீபெய்ட் திட்டங்களை தான் தற்போது நீக்கியுள்ளது. குறிப்பாக இந்த திட்டங்கள் தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்கின. தற்போது இந்த திட்டங்கள் சந்தமின்றி நீக்கப்பட்டுள்ளதால் பல வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் அதேபோல் ரூ.859 திட்டத்தின் விலை ரூ.899-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சத்தமின்றி குறைந்த விலை திட்டங்களை நீக்கிய ஏர்டெல்..

குறிப்பாக இந்த ஏர்டெல் ரூ.299 திட்டம் நீக்கப்பட்டுள்ளதால் இனி ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம். இப்போது ரூ.349 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs.349 Prepaid Plan) தினமும் 1.5 ஜிபி டேட்டா (Daily 1.5 GB Data) நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தம் 42ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 64 கேபிபிஎஸ்-ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) போன்ற நன்மைகளும் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 899 prepaid plan) தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 126ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த திட்டம்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) போன்ற நன்மைகளும் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும். ஒருவேளை தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.979 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

சத்தமின்றி குறைந்த விலை திட்டங்களை நீக்கிய ஏர்டெல்..

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 18க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Airtel Removes Multiple Prepaid Plans: Rs 299, Rs 319, Rs 579 and More No Longer Available
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X