Home
News

இனி ரூ.150 அதிகம் கொடுக்கணும்.. கஸ்டமர்கள் தலையில் இடியை இறக்கிய Airtel.. பேஸிக் பிளான் நீக்கம்!

ஜூலை மாதம் வந்தாலே, டெலிகாம் பயனர்கள் மத்தியில் ஒரு பதற்றம் வரும் அளவிற்கு - கடந்த ஜூலை 2024 இல் ஒரு பெரிய சம்பவம் நடந்து இருந்தது. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் நாடு தழுவிய மொபைல் ரீசார்ஜ் கட்டண உயர்வு ஜூலை 3, 2024 அன்று அமலுக்கு வந்தது. இவ்விரு நிறுவனங்களும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான கட்டணங்களை 10% முதல் 27% வரை உயர்த்தி இருந்தன.

இதுபோன்ற நடவடிக்கை கடந்த ஆண்டு (2025) நடக்கவில்லை. அதற்காக இந்தாண்டும் நடக்காது என்று அர்த்தமில்லை. ரீசார்ஜ் விலை உயர்வுகளை தொடர்ந்து கவனித்து வரும் என்னை பொறுத்தவரை (நானும் ஒரு ஏர்டெல் சேவை பயனர் தான்), சமீபத்தில் வெளியான, தொலைத்தொடர்பு மற்றும் இணைய துறை குறித்த 'சென்ட்ரம் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச்' (Centrum Institutional Research) அறிக்கை - மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இனி ரூ.150 அதிகம் கொடுக்கணும்.. Airtel பேஸிக் பிளான் நீக்கம்!

ஏனென்றால் அந்த அறிக்கை - இந்திய டெலிகாம் சந்தையில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையில் 15% வரை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது. மேலும் இந்த கட்டண உயர்வு அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் அமலுக்கு வரலாம் என்றும் பரிந்துரைக்கிறது. ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால், டெலிகாம் நிறுவனங்கள் சைலன்ட் ஆக ஒவ்வொரு திட்டங்களின் விலைகளையும் உயர்திக்கொண்டே தான் இருக்கின்றன.

அப்படியான ஒரு வேலையை தான் ஏர்டெல் செய்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக பார்க்கப்படும் ஏர்டெல் (Airtel) தனது ரூ.549 மதிப்பிலான தனிநபர் போஸ்ட்பெய்ட் (postpaid) திட்டத்தை நீக்கியுள்ளது. இதனால், ரூ.449 திட்டம் இப்போது அடிப்படை தனிநபர் போஸ்ட்பெய்ட் தேர்வாகவும், ரூ.699 திட்டம் அடுத்தகட்ட தேர்வாகவும் மாறியுள்ளன.

இது வாடிக்கையாளர்களை அதிக மதிப்புள்ள திட்டங்களை நோக்கி செல்ல தூண்டுகிறது. ஏர்டெல் நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், டெலிகாம்டால்க்கின் சமீபத்திய அறிக்கையின்படி - தற்போது ஏர்டெல் இணையதளம் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் ஆகியவற்றில் ரூ.549 போஸ்ட்பெய்ட் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கவில்லை

எனவே, ஏர்டெல் போஸ்ட்பெய்ட் இணைப்பை தேர்ந்தெடுக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, மாதத்திற்கு ரூ.449 (+ GST) கட்டணத்திலான தனிநபர் திட்டம் அடிப்படை தேர்வாக உள்ளது. அதேவேளையில், ஒரு முதன்மை மற்றும் ஒரு கூடுதல் (add-on) சிம் இணைப்பை உள்ளடக்கிய மாதத்திற்கு ரூ.699 (+ GST) கட்டணத்திலான குடும்பத் திட்டம் (Family plan) அடுத்த தேர்வாக உள்ளது

ரூ.449 (+ GST) ஏர்டெல் தனிநபர் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகள்: இதில் வரம்பற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டாவுடன், வரம்பற்ற உள்ளூர் (local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் அழைப்பு வசதிகளும் அணுக கிடைக்கும். கூடுதலாக, பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 5ஜி ஸ்லைசிங் (slicing) தொழில்நுட்பத்துடன் கூடிய பாஸ்ட் லேன் (Fast Lane) வசதி ஆகியவைகளும் கிடைக்கின்றன.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் - 6 மாதங்களுக்கு கூகுள் ஒன் (100GB கிளவுட் ஸ்டோரேஜ்), 3 மாதங்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium), 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium), இலவச ஹெலோ ட்யூன்ஸ் மற்றும் ப்ளூ ரிப்பன் பேக் (Blue Ribbon Bag) கண்காணிப்பு சேவை ஆகியவை நன்மைகளும் கிடைக்கும்.

ரூ.699 (+ GST) 2 பேருக்கான ஏர்டெல் ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகள்: 2 பேருக்கான இந்த ஃபேமிலி திட்டத்தின் விலை மாதம் ரூ.699 (கூடுதலாக GST) ஆகும்; இது ஒரு நபருக்கு ரூ.350 என்ற கணக்கில் அமைகிறது. இத்திட்டம் 2 சிம் கார்டுகளை (1 முதன்மை + 1 கூடுதல் சிம்) உள்ளடக்கியதுடன், அனைத்து மெம்பர்களுக்கு வரம்பற்ற 4ஜி மற்றும் 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ், 5ஜி ஸ்லைசிங்கின் கீழ் பாஸ்ட் லேன் வசதி ஆகிய நன்மைகளை வழங்குகிறது

கூடுதலாக 6 மாதங்களுக்கு அமேசான் ப்ரைம் மொபைல் (Amazon Prime Mobile) சந்தா, 6 மாதங்களுக்கு கூகுள் ஒன் (100GB கிளவுட் ஸ்டோரேஜ்), 1 வருடத்திற்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா, 3 மாதங்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் மற்றும் 12 மாதங்களுக்கு அடோப் எக்ச்பிரஸ் பிரீமியம் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.

OPINION: ஏர்டெல் நிறுவனம் ரூ.549 தனிநபர் போஸ்ட்பெய்ட் திட்டத்தை நிறுத்தியுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் இப்போது அடிப்படை நிலையிலான ரூ.449 தனிநபர் திட்டம் அல்லது அதிக மதிப்புள்ள ரூ.699 ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம் ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. நடுத்தர நிலை தனிநபர் திட்டம் நீக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் குறைந்த விலையிலான அடிப்படை திட்டத்தையோ அல்லது அதிக விலையிலான ஃபேமிலி திட்டத்தையோ தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel Removed Rs 549 Individual postpaid plan Now Users Has 2 Choices Cheap Rs 449 or Costly Rs 699
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X