சைலன்ட் ஆக நீக்கப்பட்ட முக்கிய நன்மை.. Airtel ஐயா நீங்க திடீர்னு ஆபர் கொடுக்கறப்பவே சந்தேகப்பட்டு இருக்கணும்!
ஏர்டெல் நிறுவனமானது திடீரெனெ பண்டிகை கால சலுகைகள் என்று கூறி அதன் 4 ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது எக்ஸ்ட்ரா ஆபர்களை அள்ளி வீசியுள்ளது. மறுகையில் சத்தம் இல்லாமல், அதன் 1 ஆண்டு திட்டத்தில் இருந்து முக்கிய நன்மை ஒன்றை நீக்கியும் உள்ளது.
ஏர்டெல் நிறுவனம் ரூ.3599 வருடாந்திர திட்டத்திலிருந்து ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை நீக்கியுள்ளது. ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால் அதன் ரூ.279 ஓடிடி டேட்டா பேக் மற்றும் ரூ.598 மற்றும் ரூ.1729 ஆகிய திட்டங்களில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ப்ரீமியம் (Xstream Play Premium) சந்தா வழியாக 28 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களுக்கான அணுகல்களை சேர்த்துள்ளது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ப்ரீமியமின் கீழ் என்னென்ன ஓடிடி கிடைக்கும்? நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஜீ5 (Zee5), அமேசான் எம்எக்ஸ் பிளேயர் (Amazon MX Player), சோனி லைவ் (Sony LIV), சன் நெக்ஸ்ட் (Sun NXT) ஆகிய முக்கிய ஓடிடி தளங்கள் கிடைக்கும்
கூடவே லயன்ஸ்கேட் பிளே (LionsGate Play), வ்ரூட் (VROOT), ஆஹா (Aha), டிஸ்ட்ரோ டிவி (Distro TV)சௌபால், சானா ஜோர், ஷெமரூ மீ, ஹங்காமா, ஹோய்ச்சோய், ஈரோஸ் நவ், எபிக் ஆன், மனோரமா மேக்ஸ், அல்ட்ரா, பிளேஃபிக்ஸ் கே-டிராமா, ஸ்டேஜ், கிளிக், டோலிவுட் ப்ளே, ராஜ் டிஜிட்டல், நம்ம ஃப்ளிக்ஸ், ஷார்ட்ஸ்டிவி, டாக்குபே மற்றும் ரன் டிவி ஆகியவற்றின் ஓடிடி கன்டென்ட்களையும் அணுகலாம்.
எந்தெந்த ஏர்டெல் திட்டங்கள் மீது பண்டிகை கால ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது? ஏர்டெல் நிறுவனமானது அதன் 2025 பண்டிகை கால சலுகையின் ஒருபகுதியாக 1 டேட்டா பேக் மற்றும் 3 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கள் என மொத்தம் 4 ஏர்டெல் திட்டங்களின் நன்மைகள் அதிகரித்துள்ளது
ஏர்டெல் ஏர்டெல் ரூ.100 டேட்டா பேக்கின் புதிய நன்மைகள்: ஏர்டெல்லின் இந்த டேட்டா பேக் இப்போது மொத்தம் 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. நினைவூட்டும் வண்ணம் முன்பு இது 5 ஜிபி ஆக இருந்தது. 6ஜிபி என்கிற டேட்டா லிமிட்டிற்கு பினட் ரூ.0.50/எம்பி என்கிற முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் . இந்த பேக்கின் சர்வீஸ் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதன் கீழ் ஏர்டெல் ரிவர்ட்ஸ் ஆக 30 நாட்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (22க்கும் மேற்ப்பட்ட ஓடிடி) சந்தாவும் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.449 அன்லிமிடெட் பிளான் புதிய நன்மைகள்: ஏர்டெல்லின் ரூ.449 திட்டமானது, 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் - அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 4ஜிபி டேட்டா (முன்னதாக இது 3ஜிபி டேட்டாவாக இருந்ததது) ஆகிய நன்மைகளை வழங்குகிறது.
தினசரி டேட்டா ஒதுக்கீடு முடிந்த பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக இருக்கும். மேலும் ஏர்டெல் ரிவார்ட்ஸ்-ன் கீழ் கூகுள் ஒன் (30 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (22 ஓடிடிகளுக்கான அணுகல்கள் - 28 நாட்களுக்கு), ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (28 நாட்களுக்கு), ஆப்பிள் மியூசிக் சந்தா (6 மாதங்களுக்கு), பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தா (12 மாதங்களுக்கு) மற்றும் இலவச ஹெலோடியூன்ஸ் (30 நாட்களுக்கு) ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.379 அன்லிமிடெட் பிளான் புதிய நன்மைகள்: ஏர்டெல்லின் ரூ.379 திட்டமானது, 1 மாதம் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் - அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. தினசரி டேட்டா ஒதுக்கீடு முடிந்த பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக இருக்கும்.
மேலும் ஏர்டெல் ரிவார்ட்ஸ்-ன் கீழ் 30ஜிபி கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ், 6 மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக், 12 மாதங்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ ஏஐ மற்றும் இலவச ஹெலோடியூன்ஸ் (30 நாட்களுக்கு இலவசமாக ஏதேனும் ஒரு ட்யூனை செட் செய்யலாம்) ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.349 அன்லிமிடெட் பிளான் புதிய நன்மைகள்: ஏர்டெல்லின் ரூ.349 திட்டமானது, 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் - அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது.
மேலும் தினசரி டேட்டா ஒதுக்கீடு முடிந்த பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக இருக்கும். ஏர்டெல் ரிவார்ட்ஸ்-ன் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் (22 க்கும் மேற்பட்ட ஓடிடிகள் - 28 நாட்கள்), பெர்ப்ளக்ஸிட்டி ப்ரோ ஏஐ (12 மாதங்கள்) மற்றும் ஆப்பிள் மியூசிக் பிரீமியம் (6 மாதங்கள்) ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








