Home
News

ஸ்பீட் டெஸ்டில் கிழிந்தது ஜியோவின் முகமூடி; கேவலமான இடத்தில் ஜியோ; ஏர்டெல் எப்படி.?

அன்று தொடங்கிய டெலிகாம் யுத்தம், இன்னும் முடியவில்லை.

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர் தான், மொபைல் டேட்டா மலிவான விலைக்கும் கூட கிடைக்கும் என்றும், 4ஜி இணைய வேகம் என்றால் என்ன என்பதும், இந்திய மக்களுக்கு தெரிய வந்தது. உடன் பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலர், ஏர்செல் மற்றும் வோடாபோன் இந்தியா போன்ற பெருநிறுவனங்கள், இதுநாள் வரை செய்து வந்த தில்லாலங்கடி (1ஜிபி டேட்டா ரூ.200/-க்கும் மேல்) வேலைகளும் முடிவுக்கு வந்தது.

அன்று தொடங்கிய டெலிகாம் யுத்தம், இன்னும் முடியவில்லை. நாள்தோறும் தொடரும் இந்த 4ஜி கட்டண யுத்தத்தின் விளைவாக, இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் 4ஜி சந்தைகளில் ஒன்றாக உருமாறியுள்ளது. இந்நிலைப்பாட்டில், கடந்த ஆறு ஏழு மாதமாக மிகதிவீரமாக நடக்கும் டெலிகாம் யுத்தத்தில் யார் டாப்பு.? யார் டூப்பு.? என்பதை போட்டு உடைக்கும் வண்ணம், ஓப்பன் சிக்னல் மற்றும் டிராய் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

யார் பின்னடைவை சந்தித்தது.? யார் வென்றது.?

யார் பின்னடைவை சந்தித்தது.? யார் வென்றது.?

ஓப்பன் சிக்னலின் மிக சமீபத்திய அறிக்கையின்படி, அனைத்து முக்கிய 4ஜி வழங்குநர்களும் இப்போது நாட்டில் 65 சதவீதத்திற்கும் அதிகமான LTE-களை வழங்குகின்றன. இருப்பினும், 4ஜி பதிவிறக்க வேகங்களை அதிகம் மாற்றவில்லை, சில சந்தர்ப்பங்களில் பின்னடைவுகளை சந்தித்து உள்ளன. சரி யார் பின்னடைவை சந்தித்தது.? யார் வென்றது.? என்று பார்த்தால்..

கடினமாக போராடி வருகிறது.? எந்த நிறுவனம்.?

கடினமாக போராடி வருகிறது.? எந்த நிறுவனம்.?

பார்தி ஏர்டெல் நிறுவனம் தான் உண்மையில் நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் வெற்றியாளராக அறிவியக்கப்பட்டுள்ளது. ஆம் வெளியான ஓப்பன் சிக்னல் அறிக்கையின் படி, ஏர்டெல் தான் அதிவேக 3ஜி மற்றும் 4ஜி வேகத்தை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ஒட்டுமொத்த வேக ஆதிக்கத்தையும் ஏர்டெல் கைப்பற்றியுள்ளது. இருப்பினும் கூட இந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள ஏர்டெல் கடினமாக போராடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் பரிதாப நிலை.!

ஜியோவின் பரிதாப நிலை.!

ஸ்பீட் டெஸ்ட்டின் படி, (இந்தியாவின் சிறந்த 4ஜி நெட்வர்க் வேகம் ஒப்பீடு சோதனை) ஏர்டெல்-ன் சராசரி பதிவிறக்க வேகம் 9.2Mbps ஆக பதிவாகியுள்ளது. இரண்டாம் இடத்தில் ஐடியாவும் (7.27Mbps), மூன்றாவது இடத்தில வோடபோனும் (6.98Mbps) மற்றும் நான்காவது இடத்தில் ஜியோவும் (5.13Mbps) உள்ளது. 3ஜி பிரிவில், ஏர்டெல் (2.73Mbps), ஐடியா (2.34Mbps) மற்றும் வோடாபோன் (2.27Mbps) மற்றும் பிஎஸ்என்எல் (2.19Mbps) முதல் நான்கு இடங்களை ஆட்கொண்டுள்ளது.

ஒட்டுமொத்த வேகத்தில் ஆறுதல் அளிக்கும் ஜியோ.!

ஒட்டுமொத்த வேகத்தில் ஆறுதல் அளிக்கும் ஜியோ.!

இருப்பினும், ஒட்டுமொத்த வேகத்தில், ஏர்டெல்-கு அடுத்தபடியாக (6.01Mbps) ரிலையன்ஸ் ஜியோ (5.13Mbps) இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து ஐடியா மற்றும் வோடபோன் முறையே 4.5Mbps மற்றும் 4.48Mbps என்கிற வேகத்தின் கீழ் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.இதில் மட்டும் ஜியோ இரண்டாம் இடத்தை பிடிக்க்க என்ன காரணம் என்று கேட்டால், ஜியோவின் பரவலான 4ஜி இணைப்புகளை பதிலாக கூறலாம். நாடு முழுவதும் கிடைக்கும் காரணத்தினால் தான் ஜியோவின் ஒட்டுமொத்த வேகமானது, நல்லதொரு இடத்தில் உள்ளது.

மிக வேகமான டவுன்லோட்  ஸ்பீட் (30.9Mbps) பதிவாகியுள்ளது. .!

மிக வேகமான டவுன்லோட் ஸ்பீட் (30.9Mbps) பதிவாகியுள்ளது. .!

மறுகையில், டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையானதோ ஜியோவை ஒரே அடியாக தூக்கி வைத்துள்ளது. ஆம், டிராய் டவுன்லோட் வேக அறிக்கையின்படி, ஜியோ சராசரியாக 20.5Mbps சராசரி வேகத்துடன், ஒரு பெரிய முன்னணி இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ஏர்டெல் (9.3Mbps), வோடபோன் (8.3Mbps) மற்றும் ஐடியா (7.8Mbps) சிறந்த வேகத்தை வழங்குகிறது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
எது உச்சக்கட்ட வேகம்.? எது மட்டமான வேகம்.?

எது உச்சக்கட்ட வேகம்.? எது மட்டமான வேகம்.?

இமாச்சல பிரதேசத்தில் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மிக வேகமான டவுன்லோட் ஸ்பீட் (30.9Mbps) பதிவாகியுள்ளது. இந்தியாவின் மிக குறைந்த வேகத்தை வோடபோன் (3.5Mbps) பதிவு செய்யதுள்ளது. ஒட்டுமொத்தமாக, 4ஜி வேகம் என்றால் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும் தான் மிகவும் செயல்திறன் மிக்க சேவைகளாக உள்ளன. ஆக 4ஜி சேவையின் கீழ் உள்ளவர்கள் இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.

Best Mobiles in India

English summary
Airtel & Reliance Jio Have The Fastest 4G Speeds & Best Network In India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X