Home
News

சத்தமில்லாமல் ரூ.219 திட்டத்தின் சலுகையை குறைத்த Airtel.. இதோ முழு விவரம்..

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் (Airtel) அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) உடன் இணைந்து விரைவில் அதிவேக செயற்கைக்கோள் இணையதள சேவை வழங்க உள்ளது.

குறிப்பாக இந்நிறுவனங்களின் செயற்கைக்கோள் இணையதள சேவை இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் சத்தமின்றி ரூ.219 திட்டத்தின் நன்மைகளைக் குறைத்துள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

சத்தமில்லாமல் ரூ.219 திட்டத்தின் சலுகையை குறைத்த Airtel..

ஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்(Airtel Rs 219 Prepaid Plan) ஆனது முன்பு 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி குறைத்துள்ளது ஏர்டெல். அதாவது தற்போது இந்த ஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் தான் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் 3ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 மற்றும் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளையும் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை
வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.

ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1199 prepaid plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.1199 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel reduces validity of Rs. 219 prepaid plan: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X