Home
News

சைலெண்டாக Airtel செய்த சம்பவம்.. உங்க திட்டத்துல 3 ஜிபி டேட்டா கட்.. 90 நாட்கள் திட்டத்தில் திடீர் மாற்றம்!

ஏர்டெல் (Airtel) நிறுவனமானது, மலிவு விலைக்கு கிடைத்துவந்த திட்டத்தை தூக்கிய கையோடு அடுத்ததாக டேட்டா சலுகையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இப்போது, மற்றொரு மலிவு விலையிலான திட்டத்தின் டேட்டா சலுகையை திடீரென்று குறைத்துள்ளது. நேரடியாக 3 ஜிபி டேட்டா குறைப்பு (2GB Data Reduces) செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் பழைய மற்றும் புதிய சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டமானது டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளை மட்டுமே கொடுக்கும் ரூ.195 திட்டமாகும். இதில் ஆரம்பத்தில் 15 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்பட்டது. இப்போது, 12 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. அதோடு அதிகப்படியான ஓடிடி சலுகைகளை கொடுக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட 22+ ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது.

சைலெண்டாக Airtel செய்த சம்பவம்.. உங்க திட்டத்துல 3 ஜிபி டேட்டா கட்!

சொல்லப்போனால், டேட்டா திட்டத்தில் 3 ஜிபி டேட்டா குறைப்பது என்பது ஆரம்பம்தான். வரும் நாட்களில் வாய்ஸ் கால்களை கொடுக்கும் திட்டத்திலும் டேட்டா குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இதனாலேயே முதலில் டீசர் போல டேட்டா திட்டத்தில் இருந்து ஏர்டெல் நிறுவனம் ஆரம்பித்திருக்கிறது. முன்னதாக ரூ.249 விலை கொண்ட திட்டத்தை நீக்கியது.

இது நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை கொடுத்த மலிவு விலை திட்டமாக இருந்தது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறாத கஸ்டமர்களிடையே இது நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இப்போது, நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து டேட்டா திட்டங்களின் மீது ஏர்டெல்லின் கவனம் சென்றுள்ளது.

ஏர்டெல் ரூ 195 திட்ட விவரங்கள் (Airtel Rs 195 Plan Details): இந்த டேட்டா மற்றும் ஓடிடி சந்தா கொண்ட திட்டத்துக்கு 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதுக்கும் 12 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த லம்ப்-சம் டேட்டா சலுகை முடிந்த பிறகு வழக்கமாக கிடைக்கும் போஸ்ட் டேட்டா இருக்கும் என்று நினைக்காதீர்கள்.

இதில் கொடுக்கப்படவில்லை. ஆகவே, 12 ஜிபி டேட்டாவுக்கு பிறகு கட்டணம் இருக்கும். அதே நேரத்தில் இந்த திட்டதுக்கு ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். அதாவது, உங்களிடம் ஏற்கனவே வாய்ஸ் கால்கள் அடங்கிய திட்டம் ஆக்டிவில் இருக்க வேண்டும். அப்போதுதான், இதை கூடுதல் டேட்டா மற்றும் ஓடிடி திட்டமாக ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இப்போது, ஓடிடி சலுகைகளுக்கு வருவோம். இந்த டேட்டா திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவை 1 மாதத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம். டேட்டா சலுகை குறைக்கப்படுவதற்கு முன்னதாக இதற்கு 90 நாட்கள் சந்தா கிடைத்தது. இப்போது, 30 நாட்களாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அதற்கு பதிலாக மற்றொரு சலுகை சேர்க்கப்பட்டுள்ளது.

அதாவது, முன்பு 15 ஜிபி டேட்டா, 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மட்டுமே கிடைத்தது. இப்போது, ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும், 3 ஜிபி டேட்டாவும் குறைக்கப்பட்டிருப்பதால், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தா கூடுதலாக கொடுத்து இருக்கிறது. இதில் 22 ஓடிடிக்கும் அதிகமான ஆப்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்த ஆப்களில் சோனிலிவ், லயன்ஸ்கேட்ஸ் பிளே, ஆஹா, சாவ்பால், ஹோய்சோய் மற்றும் சன்நெக்ஸ்ட் உள்ளிட்ட ஓடிடிகள் இருக்கின்றன. முன்னதாக ஜியோ நிறுவனம் அதனுடயை ரூ 249 திட்டத்தை நீக்கியது. இதையடுத்தே ஏர்டெல் நிறுவனமும் ரூ 249 திட்டத்தை நீக்கியது. இப்போது, டேட்டா குறைப்பு வந்திருக்கிறது. இது தொடரவும் வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Reduces Data Rs 195 Plan From 15GB To 12GB With 90 Days JioHotstar Mobile Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X