Home
News

TRAI மேல அந்த பயம் இருக்கணும்! உடனே ரூ.110 விலை குறைத்த Airtel.. இனி மாசம் ரூ.154 போதும், 365 நாள் வேலிடிட்டி!

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (Telecom Regulatory Authority of India) வழிகாட்டுதல்களுக்கு இணங்க, சில தினங்களுக்கு முன்னர், ஏர்டெல் நிறுவனமானது அதன் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 2 புதிய வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை (ரூ.499 மற்றும் ரூ.1959) அறிமுகப்படுத்தி இருந்தது.

இந்த திட்டங்கள் அறிமுகமான சில நாட்களிலேயே, முறையே ரூ.30 மற்றும் ரூ.110 விலை குறைப்பை பெற்றுள்ளன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்களை (Special tariff vouchers - STV) பரிசோதிப்பதாக டிராய் கூறிய சிறிது நேரத்திலேயே, ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டங்களின் விலைகளையுமே 'சைலன்ட்' ஆக குறைத்துள்ளது.

ரூ.110 விலை குறைத்த Airtel.. இனி மாசம் ரூ.154 போதும்.. 365 நாள்!

தற்போது ரூ.499 க்கு அறிமுகமான ஏர்டெல்லின் வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான் ரூ.30 விலை குறைப்பை பெற்று ரூ.469 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதேபோல ரூ.1959 க்கு அறிமுகமான ஏர்டெல்லின் வாய்ஸ் அன்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான் ரூ.110 விலை குறைப்பை பெற்று ரூ.1849 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

இந்த 2 திட்டங்களின் புதிய அல்லது திருத்தப்பட்ட விலைகளும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பிரதிபலிக்கின்றன. கூடவே பழைய (விலை) ரூ.499 மற்றும் ரூ.1949 திட்டங்கள் அகற்றப்பட்டு உள்ளன. சுவாரசியமாக விலைகள் குறைக்கப்பட்டாலும் கூட நன்மைகள் மற்றும் வேலிடிட்டியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

ஏர்டெல் ரூ.469 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 469 Voice and SMS Only Plan): இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும் (மாதாந்திர செலவு ரூ.156). கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.1849 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1849 Voice and SMS Only Plan): இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும் (மாதாந்திர செலவு ரூ.154). கூடுதலாக ஏர்டெல் ரிவார்ட்ஸின்கீழ் 3 மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸும் கிடைக்கும்.

ஏர்டெல் நிறுவனத்தை போலவே ஜியோவும் அதன் புதிய ரூ.458 மற்றும் ரூ.1958 வாய்ஸ்-எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களின் விலைகளை குறைத்துள்ளது. ஜியோவின் நுழைவு-நிலை வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்-ஒன்லி திட்டம் இப்போது ரூ.448 முதல் தொடங்குகிறது. முன்னதாக இந்த திட்டத்தின் விலை ரூ.458 ஆக இருந்தது. தற்போது ரூ.10 விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் நன்மைகளில் எந்த மாற்றமும் இல்லை.

ஜியோவின் ரூ.448 வாய்ஸ்-எஸ்எம்எஸ் ஒன்லி பிளானின் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதேபோல ஜியோவின் ரூ.1958 ஆனது இப்போது ரூ.1748 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. கூடவே 365 நாட்கள் என்கிற வேலிடிட்டியை 336 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

டேட்டா நன்மைகள் தேவைப்படாத கஸ்டமர்களுக்காக மலிவு விலையில் எஸ்டிவி (STV) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வாய்ஸ் மற்றும் மெசேஜ்களுக்கான ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்களை (Special Tariff Vouchers) அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற டிராய்-ன் சமீபத்திய உத்தரவுக்கு இணங்கியே ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் மேற்கண்ட திட்டங்களை அறிமுகம் செய்தன. ஆனால் அவைகள் எதிர்பார்த்த அளவிற்கு மலிவான திட்டங்களாக தோன்றாத காரணத்தினால் திடீர் விலை குறைப்பை பெற்றுள்ளன என்பது போல் தெரிகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Reduced Prices Of Newly Launched Voice SMS Only Plans To Rs 469 RS 1849
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X