ஒரே Airtel ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கு கவலை இருக்காது.. அன்லிமிடெட் சலுகைகள்.. மிஸ் பண்ணாதீங்க..
ஜியோ (jio) நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஏர்டெல் (Airtel) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் கூட ஜியோவுக்கு போட்டி கொடுக்கும் வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் தற்போது ஒரு வருடம் வேலிடிட்டி தரும் நான்கு அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது இந்த பதிவில் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை மற்றும் அந்த திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 3999 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. எனவே ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. அதேபோல் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data), தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.
ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 3599 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள்இந்த ஏர்டெல் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5g data) போன்ற சலுகைகளை இந்த ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது.
ஏர்டெல் ரூ 2249 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 2249 prepaid plan) ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக 30ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஏர்டெல் ரூ 2249 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகளும் இந்த அசத்தலான ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1849 prepaid plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகளும் இந்த அசத்தலான ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
photo credit: flaticon


Click it and Unblock the Notifications