2025 புது வருடம்.. அமேசான் பிரைம்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அள்ளி தரும் Airtel..
ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் OTT நன்மையை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம். அதேபோல் ஏர்டெல் நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகையை வழங்குகிறது. எனவே தான் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது 2025-ல் பட்ஜெட் விலையில் அமேசான் பிரைம் மற்றும் அதிக டேட்டா வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இப்போது இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 838 plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவேஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் இந்த
திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதேபோல் ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா (amazon prime subscription) வழங்கப்படும்.. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் ரூ.838 திட்டம்.
ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1199 prepaid plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழஙகுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.1199 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்.
குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications








