அசரவைக்கும் ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்ல 56 நாள் வேலிடிட்டி.. தினமும் 3ஜிபி டேட்டா.. OTT.. அன்லிமிடெட் சலுகைகள்..
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. எனவே தான் ஜியோ திட்டங்களை விட ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்வு செய்ய சிலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டு கம்மி விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுவர உள்ளது ஏர்டெல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா நன்மைகளை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.479 ப்ரீபெயட் திட்டம் (Airtel Rs 479 Recharge Plan) ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 84ஜிபி டேட்டா நன்மை உள்ளது. இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்.
அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்தஏர்டெல் ரூ.479 ப்ரீபெயட் திட்டம். மேலும் அன்லிமிடெட் 5ஜி (unlimited 5G data), ப்ரீ ஹாலோ டியூன்ஸ் ( free Hello Tunes), விங்க் மியூசிக் (Wynk Music), அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24/7 Circle) மெம்பர்ஷிப் உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 549 Recharge Plan) தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபொல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 112ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக அதிக டேட்டா கிடைப்பதால் இந்த திட்டத்தில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.
குறிப்பாக வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. அதேபோல் அன்லிமிடெட் 5ஜி (unlimited 5G data), ப்ரீ ஹாலோ டியூன்ஸ் ( free Hello Tunes), விங்க் மியூசிக் (Wynk Music), அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24/7 Circle) மெம்பர்ஷிப் உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 699 Recharge Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே பயனர்கள் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு அமேசான் பிரைம் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம்.

இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தாவும் வழங்குகிறது இந்த ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு அன்லிமிடெட் 5ஜி (unlimited 5G data), ப்ரீ ஹாலோ டியூன்ஸ் ( free Hello Tunes), விங்க் மியூசிக் (Wynk Music), அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24/7 Circle) மெம்பர்ஷிப் உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அதேபோல் 56 நாள் வேலிடிட்டி வேண்டாம் என்று நினைப்பவர்கள் 60 நாள் வேலிடிட்டி தரும் ரூ.519 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 519 Recharge Plan) ரீசார்ஜ் செய்யலாம். குறிப்பாக ஏர்டெல் ரூ.519 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி (unlimited 5G data), ப்ரீ ஹாலோ டியூன்ஸ் ( free Hello Tunes), விங்க் மியூசிக் (Wynk Music), அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24/7 Circle) மெம்பர்ஷிப் மெம்பர்ஷிப் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








