Home
News

ஒரே Airtel ரீசார்ஜ்.. வெறும் ரூ.299 மாத செலவு.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!

அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வருடம் முழுவதும் வேண்டுமானால், மாதத்துக்கு ரூ.299 செலவில் கிடைக்கும் இந்த ஏர்டெல் வருடாந்திர திட்டத்தை (Airtel Yearly Plan) கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இது டேட்டா சலுகையில் கஸ்டமர்களை தட்டித்தூக்கும்படி இருக்கிறது. இந்த ஒரு வருட திட்டத்தின் முழு சலுகைகளை பார்ப்போம்.

ஏர்டெல் நிறுவனத்தில் தினசரி டேட்டா சலுகையை கொடுக்கும்படி 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டுமே இருக்கிறது. ஒரு திட்டம் ரூ 3,999 விலைக்கு கிடைக்கிறது. இது மிகவும் அதிகமாக தோன்றலாம். ஆனால், அதற்கு ஏற்ப சலுகைகளை கொடுக்கிறது. இருப்பினும், ஏர்டெல் கஸ்டமர்கள் ரூ 3599 விலை கொண்ட வருடாந்திர திட்டத்தையே ரீசார்ஜ் செய்து வருகின்றனர்.

ஒரே Airtel ரீசார்ஜ்! வெறும் ரூ.299 மாத செலவு.. 365 நாட்கள் வேலிடிட்டி!

இதற்கு காரணம், 2 திட்டங்களிலும் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதே நேரத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கிடைக்கிறது. ஆகவே, இப்போதைக்கு ஏர்டெல் நிறுவனம் 5ஜி டேட்டாவை இலவசமாகவே கொடுக்கிறது. இதனால், தினசரி டேட்டாவுக்கு பெரிய அவசியம் ஏற்படவில்லை. இதனாலேயே ரூ 3599 திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படுகிறது.

ஏனென்றால், ரூ 3999 திட்டத்தில் தினசரிக்கு 3 ஜிபி டேட்டா கிடைத்தாலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால், அந்த 3 ஜிபி டேட்டா அவசியமானதாக இருக்கவில்லை. இதைவிட ரூ.400 விலை கம்மியான கிடைக்கும் ரூ 3,599 திட்டத்தில் 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தாலும், இதிலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வருவதால், 2 திட்டங்களிலும் டேட்டாவில் மாற்றங்கள் இருக்கப்போவதில்லை.

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம் ரூ 3599 (Airtel Recharge Plan Rs 3599): முன்பே சொன்னதை போல இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த 5ஜி டேட்டாவை பெற முடியாத கஸ்டமர்கள் 4ஜி வேகத்தில் பயன்படுத்தும்படி நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இந்த 4ஜி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) கிடைக்கிறது. இந்த டேட்டா சலுகைகளை போலவே வாய்ஸ் கால்களும் கிடைக்கிறது. அதாவது, அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) என்று டேட்டாவை போலவே பயன்படுத்தி கொள்ளலாம். இதில் எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது.

இது வழக்கமாக கிடைப்பதை போலவே நாளொன்றுக்கு 100 என்னும் கணக்கில் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும், ஸ்பேம் அலெர்ட் சலுகை மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகைகளை பேக் செய்துள்ளது. இது தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் கிடைக்கும் வருடாந்திர திட்டமாகும். வெறும் வாய்ஸ் கால்கள் போதும் என்றால் மற்றொரு திட்டம் உள்ளது.

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம் ரூ 1849 (Airtel Recharge Plan): இந்த திட்டம் வாய்ஸ் கால்களை மட்டுமே கொடுக்கும். ஆகவே, நீங்கள் டேட்டாவை எதிர்பார்க்கவே முடியாது. இதனாலேயே முந்தைய திட்டத்தைவிட கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலைக்கு கிடைக்கிறது. இதில் வாய்ஸ் கால்கள் முந்தைய திட்டத்தை போலவே வருடம் முழுவதும் அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கும்.

அதே நேரத்தில் மொத்தமாக 3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். இது தவிர ஸ்பேம் அலெர்ட் மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கும். இந்த சலுகைகளை மட்டுமே, இந்த மலிவு விலை திட்டம் கொடுக்கிறது. இதில் எந்த திட்டம் உங்களது பட்ஜெட் அல்லது தேவைகளுக்கு ஏற்ப இருக்கிறதோ அதை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Recharge Plan With 365 Days Validity 2GB Data Unlimited Voice Calls At Rs 3599 Check Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X