Home
News

Airtel: 1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ்.! ஓஹோனு நன்மைகள்! ஃபேமஸ் பிளான் இது தான்!

இந்தியாவில் என்ன தான் 3 டெலிகாம் ஆபரேட்டர்கள் இருந்தாலும், மக்கள் ஏர்டெல் மற்றும் ஜியோவை மட்டுமே அதிகமாக பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, சில சமர்த்தியமான பயனர்கள் இவர்களிடம் இருக்கும் 1 வருட ரீசார்ஜ் திட்டங்களை மட்டுமே ரீசார்ஜ் செய்கிறார்கள்.

அப்படி இந்தியாவில் அதிக பிரபலமான 1 வருட ரீசார்ஜ் திட்டங்களை பற்றி பேசுகையில், பலர் Airtel நிறுவனத்தின் 3 திட்டங்களை மட்டுமே வருடம் தவறாமல் மீண்டும்-மீண்டும் ரீசார்ஜ் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில், பார்தி ஏர்டெல் பயனர்களுக்கு மூன்று ரீசார்ஜ் திட்டங்களைக் வழங்குகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும், 365 நாட்கள் சேவையை வழங்கும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதன் பொருள் இந்த திட்டங்கள் ஒரு முழுமையான ஆண்டு செல்லுபடியாகும்.

Airtel: 1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ்.! ஓஹோனு நன்மைகள்!

இந்த மூன்று திட்டங்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை என்றாலும், பல்வேறு பயனர்களின் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த பட்டியலில் மிகவும் மலிவு விலை திட்டமாக ரூ.1799 விலை திட்டம் திகழ்கிறது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு தேவையான SMS, டேட்டா நன்மை மற்றும் வாய்ஸ் கால் நன்மைகளை தாராளமாக வாரி இறைக்கிறது. இந்த 3 திட்டங்களில் மக்கள் எந்த திட்டத்தை அதிகமாக விரும்பி ரீசார்ஜ் செய்கிறார்கள் தெரியுமா?

இந்த பட்டியலில் மிகவும் விலையுயர்ந்த திட்டம் ரூ.3359 திட்டமாகும். இந்த திட்டம் தான் Airtel பயனர்களுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. இதை தான் அதிகமாக சாமர்த்தியசாலிகள் விரும்பி ரீசார்ஜ் செய்கிறார்கள். சரி, இந்த திட்டம் அதன் விலைக்கு என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாமா? பார்தி ஏர்டெல் ரூ 3359 திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது.

இந்த Airtel திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகளாக அன்லிமிடெட் 5G டேட்டா இலவசமாக கிடைக்கிறது. இது தவிர ஒரு வருடத்திற்கு Disney+ Hotstar மொபைல், மூன்று மாதங்களுக்கு Apollo 24|7 Circle, FASTag உடன் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music போன்ற பலன்களும் கிடைக்கிறது.

Airtel: 1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ்.! ஓஹோனு நன்மைகள்!

Airtel வழங்கும் அடுத்த 1 வருட ரீசார்ஜ் திட்டம் ரூ.2999 விலையில் வருகிறது. இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது மற்றும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் ஆகியவற்றை வழங்குகிறது. Apollo 24|7 Circle, FASTagல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music போன்ற கூடுதல் சலுகைகளும் இத்துடன் கிடைக்கிறது.

இறுதியாக, இந்த பட்டியலில் இருக்கும் பார்தி Airtel திட்டமானது மிகவும் மலிவு விலையில் ரூ.1799 என்ற விலையில் வருகிறது. இது 24ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 100 SMS நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இந்தத் திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். இத்துடன் அப்பல்லோ 24|7 சர்க்கிள், ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்ற கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது.

இந்த ரீசார்ஜ் திட்டங்கள் அனைத்தும் 365 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் செய்து, எந்தவித டென்ஷனும் இல்லாமல், உங்கள் வருட பயன்பாட்டை எந்த தொல்லையும் இல்லாமல், தடையின்றி அனுபவிக்கலாம்.

Best Mobiles in India

English summary
Airtel recharge only 1 time in 1 year with 365 days validity benefits check these famous prepaid plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X