ரூ.349-திட்டத்தில் சிறப்பு சலுகைகளை வழங்கும் ஏர்டெல் நிறுவனம்.!

|

டெலிகாம் துறையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை எதிர்த்து நிற்கும் தலை சிறந்த நிறுவனமாக பாரதி ஏர்டெல் நிறுவனம் திகழ்கிறது. ஜியோவின் பல திட்டங்களுக்கு சவால் விடும் விதத்தில், ஏர்டெல் நிறுவனமும் பல புதிய திட்டங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்து தான் வருகிறது.

ஏர்டெல் நிறுவனத்தில்

மேலும் ஏர்டெல் நிறுவனத்தில் குறைந்த விலையில் ஒரு பிரீபெய்ட் திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால், இது உங்களுக்கான செய்தி. இந்த ஏர்டெல் பிரீபெய்ட் திட்டத்தின் விலை 350 ரூபாய்க்கும் குறைவானது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். ஆனால் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தின் மூலம் டேட்டா நன்மை, இலவச அழைப்பு நன்மை மற்றும் எஸ்எம்எஸ் தவிர மேலும் 6 நன்மைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. அந்த திட்டத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் நிறுவனம் ரூ.349-திட்டத்தை வைத்துள்ளது

அதன்படி ஏர்டெல் நிறுவனம் ரூ.349-திட்டத்தை வைத்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி அதிவேக டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் எந்தவொரு நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு (Unlimited Calling) நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன.

விரைவில் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் iQOO U1x ஸ்மார்ட்போன்.!விரைவில் 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் iQOO U1x ஸ்மார்ட்போன்.!

 ரூ.349-பிரீபெய்ட்

மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349-பிரீபெய்ட் திட்டம் ஆனது 28நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா என்றால், 28 நாட்களுக்கு மொத்தம் 56ஜிபி அதிவேக டேட்டா நன்மை வழங்கப்படுகிறது.

பிற நன்மைகள்

கூடுதலாக இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் (Amazon Prime Video) OTT தளம் 28 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இசை மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் விங்க் மியூசிக் (Wink Music) மூலம் இலவசமாக பாடல்களை கேட்கலாம்.

 எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்திற்கான (Airtel Xstream Premium) அணுகல்

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்திற்கான (Airtel Xstream Premium) அணுகல் எந்த கட்டணமும் இன்றி வழங்கப்படும். வரம்பற்ற முறையில் இலவச ஹாலோடூனை (HelloTune) உங்கள் போனில் அமைக்க முடியும். ஃபாஸ்டேக் (FASTag) வாங்கும்போது ரூ.150 கேஷ்பேக் கிடைக்கும்.

 Shaw Academy-யில் ஆன்லைன்

பின்பு ஒரு வருடம் Shaw Academy-யில் ஆன்லைன் கோர்ஸ் இலவசமாக படிக்கலாம். குறிப்பாக இந்த சலுகைகள்அனைத்தும் ரூ.349 என்ற ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும். உடனடியாக இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel Prepaid Plans: Get Amazon Prime with Airtel 349 Plan this recharge plan : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X