இதே வேலையா போச்சு: ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்திய Airtel.! கடுப்பில் பயனர்கள்!
ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு முன்பே ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்தி வேலையைக் காட்டிவிட்டது. அதாவது ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது.

எத்தனை வட்டாரங்களில் உயர்வு?
இப்போது நாட்டின் 7 டெலிகாம் வட்டாரங்களில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனவே இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் 9 டெலிகாம் வட்டாரங்களில் விலை உயர்வைச் சத்தமில்லாமல் அமலுக்கு கொண்டுவந்துள்ளது.

57 சதவீதம் அதிகரித்தது ஏர்டெல்
குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஹரியான மற்றும் ஓடிசாவில் மட்டும் குறைந்த விலையில் கிடைத்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை 57 சதவீதம் அதிகரித்தது ஏர்டெல். தற்போது நாட்டின் 7 டெலிகாம் வட்டாரங்களில் குறைந்தபட்ச ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

economictimes தகவலின்படி, ஆந்திரப் பிரதேசம், பீகார், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், குறிப்பிட்ட வடகிழக்கு மாநிலங்கள், கர்நாடகா மற்றும் உபி-மேற்கு ஆகிய வட்டாரங்களில் தான் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

ஏர்டெல் ரூ.99 திட்டம்
குறிப்பாக இந்த வட்டாரங்களில் ஏர்டெல் ரூ.99 திட்டத்தின் விலை தற்போது ரூ.155 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஏர்டெல் ரூ.99 திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி, 200எம்பி டேட்டா, உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் போன்ற நன்மைகளை வழங்கியது.

ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம்
தற்போது புதிய ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வெறும் 24 நாட்கள் மட்டும் வேலிடிட்டியை வழங்குகிறது. பின்பு இதில் 1ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், இலவச ஹெலோ டியூன்கள், வின்க் மியூசிக் சந்தா வழங்கப்படுகிறது.

செய்தி தொடர்பாளர்
அதேபோல் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் எங்களின் குறிக்கோளை அடையும் வகையில், ரூ.99 திட்டத்தை நிறுத்திவிட்டு, ரூ.155 விலையில் எண்ட்ரி லெவல் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறோம். இதில் 1ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் போன்ற பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக இது வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான வசதிகளை வழங்கும் என்று எர்டெல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

4 நகரங்களில் 5ஜி
மேலும் ஏர்டெல் நிறுவனம் அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள 4 நகரங்களில் தனது 5ஜி சேவைகளை (Airtel 5G) அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த நகரங்கள் - கோயம்புத்தூர் (Coimbatore), ஓசூர் (Hosur), திருச்சி (Trichy) மற்றும் மதுரை (Madurai) ஆகும்.

அதிக வேகத்தை வழங்கும்
கோவை, ஓசூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியதின் மூலம், தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகளானது நாட்டின் 52 நகரங்களில் அணுக கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இப்போது சென்னையையும் சேர்த்து, தமிழகத்தில் உள்ள 5 நகரங்களில் ஏர்டெல்லின் 5ஜி பிளஸ் சேவைகள் அணுக கிடைக்கிறது. ஏர்டெல் தெரிவித்த தகவலின்படி, 5ஜி பிளஸ் நெட்வொர்க் ஆனது தற்போதைய 4ஜி நெட்வொர்க்குகளை விட 20x முதல் 30x அதிக வேகத்தை வழங்கும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








